Diet Tips: 40+ ஆண்களின் டயட்டில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய '4' பொருட்கள்!

ஆண்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்தை பெற 40 வயதிற்குப் பிறகு, கண்டிப்பாக உணவில் சிலவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 6, 2022, 06:30 PM IST
  • முழு தானியங்களில் புரதங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இவை அவசியம்.
  • புரதம் நிறைந்த உணவு உங்களின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.
Diet Tips: 40+ ஆண்களின் டயட்டில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய '4' பொருட்கள்! title=

Men's Health: 40 வயதிற்குப் பிறகு உடல் ஆரோக்கியமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, கண்டிப்பாக உணவில் சில பிரத்யேக விஷயங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வயதாகும்போது, ​​வளர்சிதை மாற்றம் குறைகிறது. வளர்சிதை மாற்றம் குறைவதால், உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக தொப்பை கொழுப்பு பிரச்சனை ஏற்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவும் வயதுக்கு ஏற்ப குறைகிறது, எனவே ஆண்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்தை பெற 40 வயதிற்குப் பிறகு, கண்டிப்பாக உணவில் சிலவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், பிபி கட்டுக்குள் இருக்கும். இது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

ALSO READ | Turmeric: 'இந்த’ பிரச்சனை இருக்கிறவங்க ‘மஞ்சளுக்கு’ NO சொல்லுங்க...!!

புரதம் மற்றும் முழு தானியங்கள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பருப்புகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள் போன்ற புரதத்தின் மூலங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முழு தானியங்களில் உள்ள புரதங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 40 வயதிற்குப் பிறகு, ஆண்கள் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். புரதம் நிறைந்த உணவு உங்களின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்

ஆலிவ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை சாப்பிடுங்கள். அவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. 40 வயதிற்குப் பிறகு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். டிரான்ஸ் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவற்றை உட்கொள்ள வேண்டாம்.

ALSO READ | விலையுயர்ந்த க்ரீம்களுக்கு டஃப் கொடுக்கும் ஆரஞ்சு பழச்சாறு

அதிக அளவில் திரவங்களை அருந்தவும்

உணவில் திரவ உணவுகளை அதிகரிக்கவும். உங்கள் தசை மற்றும் சிறுநீரக செயல்பாட்டிற்கு நீர் சத்து மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். க்ரீன் டீ, ஜூஸ், காய்கறி சாறு, தேங்காய் தண்ணீர், எலுமிச்சைப்பழம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. காஃபின் உட்கொள்ள வேண்டாம். காஃபின் அதிகமாக உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

2. பொரித்த உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், எண்ணெய் உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

3. சோடியம் மிக அதிகமாக உள்ளவற்றை சாப்பிட வேண்டாம். உப்பு அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு சிறுநீரக நோய்களுக்கும் வழிவகுக்கும்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News