Omicron முக்கிய செய்தி: ஜலதோஷமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா? ஆய்வில் தகவல்
உடலில் குளிர்ச்சி அதிகமாகி சளி, ஜலதோஷம் ஏற்பட்டால், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாகிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயின் அச்சம் நிலவுகிறது. அனைத்து இடங்களிலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மக்கள் மனதில் இருக்கும் அச்சம் குறையும் வகையில், விஞ்ஞானிகள் மக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளனர். உடலில் குளிர்ச்சி அதிகமாகி சளி, ஜலதோஷம் ஏற்பட்டால், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாகிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சளி இருமல் 'பாதுகாப்பு கவசம்' ஆனது
'தி சன்' அறிக்கையின்படி, லண்டனின் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் இருமல் மற்றும் சளி (Common Cold) T-செல்களை, அதாவது இரத்த அணுக்களை, வைரஸ்களைக் கண்டறிவதில் திறம்பட செயல்படுவதைத் தூண்டுவதாகக் கண்டறிந்துள்ளனர். இது தவிர, கோவிட் வந்தால் நமது நுகரும் திறன் குறைகிறது. இதன் மூலமும் நமது நோய் எதிர்ப்புச் சக்தி பலப்படுத்தப்படுகிறது.
நாம் வைரஸால் பாதிக்கப்படும்போது, உடலில் டி-செல்கள் உருவாகத் தொடங்குகின்றன, மேலும் இதன் மூலம் கோவிட் (Covid 19) தொற்றுக்கு எதிராக நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் தயாராகிறோம் என்று டாக்டர் ரியா குண்டு கூறினார். இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு, ஆனால் இது ஒரு பாதுகாப்பு முறை மட்டுமே, அதை மட்டும் நம்பக்கூடாது என்று மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
டி-செல்களிலிருந்து பாதுகாப்பைப் பெறுதல்
கொரோனாவைத் தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி தடுப்பூசி என்றும், அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவது அவசியம் என்றும், அதே போல் பூஸ்டர் டோஸும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
கொரோனா பாதித்தவர்களுடன் வாழ்ந்து வந்த 52 பேர் கொண்ட குழுவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இவர்களில் பாதி பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தப் பரிசோதனையில் தொற்றுக்கு ஆளாகாத 26 பேரின் டி-செல் அளவு மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. ஏனெனில் அவர்கள் முன்பு மற்றொரு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பழைய கோவிட் தடுப்பூசி இன்னும் பயனுள்ளதாக உள்ளது
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் குறைந்தது 4 வகையான கொரோனா வைரஸ்கள் (Coronavirus) உள்ளன. அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு ஜலதோஷம் இருக்கும். யார் உடலில் T-செல் அதிகமாக உள்ளதோ, அவர் மீது அனைத்து கொரோனா வைரஸ்களின் தாக்கமும் ஒரே மாதிரிதான் இருக்கும். இவை அனைத்து வைரஸ்களுக்கு எதிராக ஒரு பக்-கைப் (Bug) போல வேலை செய்கிறது. வைரஸ் உடலுக்குள் நுழைவதையும் இது தடுக்கிறது.
உண்மையில் டி-செல்கள் அடிக்கடி மாற்ற முடியாத வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகின்றன. உடலின் ஆன்டிபாடிகளின் செயல்திறன் குறைவாக இருந்தாலும் கூட, நமது பழைய தடுப்பூசிகள் புதிய கோவிட் வகைகளுக்கு எதிராக செயல்படுவதற்கு இதுவே காரணம்.
அனைத்து வகையான கொரோனா வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும் பாதுகாப்பு கவசம் கிராஸ் ப்ரொடெக்ஷன் எனப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர் அஜித் லால்வானி கூறுகையில், 'உடலில் ஜலதோஷம் ஏற்படும்போது, உடலில் உருவாக்கப்படும் டி-செல்கள் கொரோனா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது தெளிவாகிறது.' என்றார்.
ALSO READ | Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR