COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!

உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டேவிட் நபாரோ (David Nabarro), அடுத்த மூன்று மாதங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2022, 04:55 PM IST
  • COVID தொற்று தற்போது ப்ளூ காய்ச்சலை போல இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
  • மக்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வார்கள்.
  • கோவிட் தொற்றுநோய் ‘pandemic' என்ற நிலையில் இருந்து 'endemic' நிலையை எட்டி விடும்
COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...! title=

COVID-19 தொற்றுநோய் பரவல் தொடங்கி கிட்டதட்ட இரண்டு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில், தினம் தினம் ஒரு புதிய மாறுபடு குறித்த செய்தி மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. அதிலும் தற்போது ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் மூன்றாவது அலை தாக்கும் நிலை உருவாகி வருகிறதோ என்ற வகையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான பேராசிரியர் பால் ஹண்டர் (Paul Hunter), உலகிற்கு நிம்மதி அளிக்கும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.  ஓமிக்ரான் (Omicron) அலை தணிந்த பிறகு, வேறு எந்த மாறுபாடுகளும் தோன்றவில்லை என்றால், கோவிட் தொற்றுநோய் ‘pandemic' என்ற நிலையில் இருந்து 'endemic'  நிலையை எட்டி விடும் என்கிறார். அதாவது பெருந்தொற்று என்ற நிலை மாறி, தீவிரம் குறைந்து தொற்று கிட்ட தட்ட முடிவுக்கு வந்து விடும் எனக் கூறியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மக்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதால், ஒவ்வொரு ஆண்டும் COVID "நிச்சயமாக" பலவீனமடையும் என்று ஹண்டர் குறிப்பிட்டார்.

ALSO READ | Omicron symptoms: இதுதான் ஒமிக்ரானின் ஆபத்தான ஐந்து அறிகுறிகள் 

தற்போது, ​​ஒமிக்ரான் பரவல் உச்சத்தை எட்டியுள்ளதாக என்று நம்பப்படும் இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 130 பேர் கோவிட் நோயால் இறக்கின்றனர். தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதற்கு முன்பு, கடந்த ஜனவரியில் 1,300 பேர் இருந்தனர் என்று அறிக்கை கூறுகிறது.

இங்கிலாந்தில், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலிருந்து நோய்த்தொற்று விகிதம் நான்கு மடங்கு அதிகமாக இருந்தாலும், தினசரி இறப்புகள் அளவு மாறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், அரசாங்க மதிப்பீடுகளின் மூலம் வெளியான தரவுகளில் 2017/18  ஆம் ஆண்டின் கடைசியாக மோசமான இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் அதிக அளவில் பரவிய போது, ஒரு நாளைக்கு 400 க்கும் மேற்பட்ட  இறப்புகள் பதிவாகின என்றும், முந்தைய ஆண்டில் கிட்டத்தட்ட 300 தினசரி இறப்புகள் இருந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

COVID  தொற்று தற்போது ப்ளூ காய்ச்சலை போல இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என ஹண்டர் கூறினார். இதனை கோவிட் நெருக்கடியின் முடிவு  ஏற்படும் நிலை என குறிக்கலாம் என உயர்மட்ட வல்லுநர்கள் இன்று கூறிய நிலையில், ஹண்டர் கூறிய இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிரிட்டன் வைரஸுடன் "வாழ வேண்டும்" என்ற நிலையில் இருப்பதாக இங்கிலாந்து அமைச்சர்கள் கூறினர்.

உலக சுகாதார அமைப்பைச் (WHO) சேர்ந்த டேவிட் நபாரோ (David Nabarro), கொரோனா வைரஸ் அடுத்த மூன்று மாதங்களுக்கு மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும்  என்றாலும், அதன் முடிவு கண்ணில் தெரிகிறது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Omicron அறிகுறி இருந்தால் இவற்றை உட்கொள்ளுங்கள்: அதிக பலன் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News