Omicron Coronavirus Recovery: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும். ஆகையால், நோயாளி முழுமையாக குணமடைய அதிக நேரம் எடுக்கும். கொரோனாவின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் கொரோனாவின் பின் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவில் (Coronavirus) இருந்து மீண்டு வரும் நேரத்தில், பலவீனம் அதிகமாக இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளைத் தரும் நோயாக இது மாறியுள்ளது. எனவே, இந்த தொற்றுநோயிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்ட நபரை மீட்பதிலும் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. 


கொரோனாவின் அனைத்து மாறுபாடுகளிலிருந்தும் குணமடைய, மருந்துடன் உணவில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும். கொரோனா பாதித்த நபர், நொறுக்குத் தீனிகள், பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் வெளி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவர்கள் எவற்றையெல்லாம் உட்கொள்வது ஆபத்தாகலாம் என்பதை இந்த பதிவில் கானலாம். 


கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள் இவற்றை தடுப்பது நல்லது: 


1- நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும்: 


பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட் மற்றும் அனைத்து விதமான நொறுக்குத் தீனிகளையும் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உட்கொள்ளக் கூடாது. அவை நம் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இந்த உணவு சாப்பிட நன்றாகத் தெரிந்தாலும், உடல் பருமனை அதிகரித்து, ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.


ALSO READ | Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ 


2- பேக் செய்யப்பட்ட உணவுகள்:


கொரோனாவில் இருந்து மீண்டு வரும் போது பேக் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடக்கூடாது. இவற்றை சமைப்பது எளிதாக இருக்கலாம், ஆனால் இவை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய உணவுகளில் ப்ரிசர்வேடிவ்கள் மற்றும் சோடியம் அதிகம் இருக்கும். டின்களில் அல்லது பேக்கெட்டுகளில், சமைக்க எளிதாக வரும் இந்த உணவுகளை உண்பதால் உடலில் வீக்கம் ஏற்படும். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக கொரோனாவிலிருந்து முழுமையாக மீள்வதற்கு மிக அதிக நேரம் எடுக்கலாம். 


3- வறுத்த உணவு: 


கோவிட் (Covid-19) நோயிலிருந்து மீண்டு வருபவர்களில் சிலருக்கு சில காலம் சுவை மற்றும் வாசனை உணர்வு இல்லாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், குணமடையும் போது படிப்படியாக சுவை மீண்டும் வரத் தொடங்கும் போது, ​​ நோயாளிக்கு காரமான, மசாலா அதிகமாக உள்ள உணவை சாப்பிட ஆசை வரலாம். ஆனால் இப்படி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக எண்ணெய் உள்ள உணவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனுடன் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. எனவே, நோய்வாய்ப்பட்டவர் வறுத்த மற்றும் பொரித்த உணவைத் தவிர்க்க வேண்டும்.


4- குளிர் பானங்கள் அருந்துதல்:


கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் குளிர் பானங்கள் அருந்தக் கூடாது. குளிர் பானங்கள் குடிப்பதால் வயிற்றில் வீக்கம் ஏற்படும். இது தவிர, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படலாம். குளிர் பானங்கள் குடிப்பதால் தொண்டையிலும் வலி ஏற்படலாம்.


5- காரமான / மசாலா அதிகமாக உள்ள உணவு:


கொரோனா நோயாளி (Corona Patients) இலகுவான மற்றும் எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும். காரமான / மசாலா அதிகமாக உள்ள உணவுகளுக்குப் பதிலாக எளிய உணவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக காரமான உணவுகளை உண்பதால் வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் தொண்டை வலி போன்றவை ஏற்படும். இந்த வகை உணவும் இருமல் பிரச்சனையை உண்டாக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | குழந்தைகளில் காணப்படும் 'இந்த' ஒமிக்ரான் அறிகுறிகளை அலட்சியபடுத்த வேண்டாம்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR