Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ

மருத்துவ நிபுணர்கள் ஓமிக்ரானின் முக்கிய அறிகுறிகளை பட்டியலிடுட்டுள்ளனர். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2022, 05:56 PM IST
  • கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது.
  • நீங்கள் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி கண்டறிவது?
  • இந்திய மருத்துவர்கள் ஓமிக்ரானின் அறிகுறிகளை வகைப்படுத்தப்படுத்தியுள்ளனர்.
Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ title=

Omicron Symptoms: கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த மாறுபாட்டின் அறிகுறிகள் SARS-CoV-2 இன் மற்ற வகைகளிலிருந்து வேறுபட்டு உள்ளதாக அறிக்கைகள் வந்துள்ளன. 

மருத்துவ நிபுணர்கள் ஓமிக்ரானின் (Omicron Variant) முக்கிய அறிகுறிகளை பட்டியலிடுட்டுள்ளனர். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

நீங்கள் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி கண்டறிவது? 

- ஓமிக்ரானின் அறிகுறிகள் பொதுவாக உடல் வலி, பொதுவான பலவீனம், சோர்வு, தலைவலி மற்றும் காய்ச்சலுடன் ஆரம்ப நாட்களில் தொடங்குகின்றன. 
- பின்னர் இவை இருமலை உருவாக்கலாம். இருமல் சில சமயங்களில் வறட்டு இருமலாகவும், சில சமயம் சளியுடன் கூடிய இருமலாகவும் இருக்கலாம். 
-  மூக்கிலிருந்து சளி வருக்கூடும். எனினும், பெரும்பாலும், இதில் வறட்டு இருமலே இருக்கும். இது அடுத்த சில நாட்களில் குணமாகும். 
- பெரும்பாலான நேரங்களில் அதாவது, 80% நோயாளிகளில், முதல் 3 நாட்களில் காய்ச்சல் குணமாகிறது. 
- சரியாகாத சிலருக்கு, இது மிதமான முதல் கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாக மாறும். இந்த நோயாளிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். 

தொற்றால் பாதிக்கப்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?

- தொற்று ஏற்பட்டால், சரியான நேரத்தில் தனிமைப்படுத்துவது மிக முக்கியமாகும். 
- உங்களிடமிருந்து உங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பது அவசியம்.
- அதனால்தான் ரேபிட் ஆன்டிஜெனைப் பயன்படுத்துவது மிக முக்கியமானது. இந்த பரிசோதனையின் முடிவுகள் நெகடிவாக வந்து, ஆனால் உங்களுக்கு இன்னும் அறிகுறிகள் இருந்தால், அப்போது RTPCR பரிசோதனை மூலம், உங்களுக்கு சிறிய அளவு கோவிட் ஓமிக்ரான் தொற்று இருந்தாலும் கண்டறிந்துவிடலாம். மேலும் தொற்று அதிக நபர்களுக்கு பரவாமலும் தடுக்கலாம்.

அறிகுறி இருந்து வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

- உங்களுக்கு தொற்றுக்கான அறிகுறி இருந்தால், வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. 
- எனினும், நீங்கள் கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், முகக்கவசத்தை சரியாக அணிந்து கொள்ளுங்கள். 
- முடிந்தவரை N95 முகக்கவசங்களையே அணிய வேண்டும். 

"ஒமிக்ரான் தொற்று மற்ற மாறுபாடுகளை விட எளிதில் வேகமாக பரவக்கூடியது. ஆகையால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொது இடங்களிலும் மருத்துவமனைகள் போன்ற அதிக ஆபத்துள்ள இடங்களிலும் நாம் சரியாக முகக்கவசத்தை அணிய வேண்டும். உங்களுக்கு அறிகுறிகள் இருந்து, வெளியே செல்ல நேரிட்டால், கண்டிப்பாக N95 முகக்கவசத்தை (Facemask) அணிந்திருக்க வேண்டும். ஓமிக்ரானின் அறிகுறி இருந்தால், ஒரு சிறிய துணியோ அல்லது சர்ஜிகல் மாஸ்கோ போதுமானதாக இருக்காது," என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். 

ALSO READ | Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை

ஓமிக்ரானின் ஐந்து பொதுவான அறிகுறிகள்

- US CDC பகுப்பாய்வின்படி, Omicron மாறுபாட்டின் ஐந்து பொதுவான அறிகுறிகள் (Omicron Symptoms) இருமல், சோர்வு, நெரிசல், சளி மற்றும் பொதுவான உடல் வலி ஆகியவை ஆகும். 

- சமீபத்தில், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட Zoe Covid செயலி ஆய்வு, குமட்டல் மற்றும் பசியின்மை போன்ற புதிய அறிகுறிகளைச் சேர்த்துள்ளது. 

இந்திய மருத்துவர்கள் ஓமிக்ரானின் அறிகுறிகளை பொதுவான அறிகுறிகள், குறைவாகத் தெரியும் பொதுவான அறிகுறிகள் மற்றும் தீவிர அறிகுறிகள் என வகைப்படுத்தப்படுத்தியுள்ளனர்.

ஓமிக்ரானின் பொதுவான அறிகுறிகள்

- காய்ச்சல்
- இருமல்
- சோர்வு
- சுவை அல்லது வாசனை இழப்பு.

ஓமிக்ரானின் குறைவாகத் தெரியும் பொதுவான அறிகுறிகள்

- தொண்டை வலி
- தலைவலி
- உடல் வலி
- வயிற்றுப்போக்கு
- தோலில் சொறி போன்ற உணர்வு
- கைவிரல்கள் அல்லது கால்விரல்களில் சிவப்பு தடிப்புகள்
- கண்களில் எரிச்சல் 

ஓமிக்ரானின் தீவிர அறிகுறிகள்

- சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்
- பேச்சு அல்லது உடல் இயக்கத்தில் பிரச்சனை 
- குழப்பம் 
- மார்பு வலி

ALSO READ | Omicron தொற்றின் புதிய அறிகுறி: இவற்றை உட்கொண்டால் தீர்வு காணலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News