இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56,017 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கோவிட் -19 பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு இருக்கும் அறிகுறிகள் அத்தனை தீவிரமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓமிக்ரானின் அறிகுறிகள் டெல்டா வகைகளிலிருந்து வேறுபட்டவை


மிரர் அறிக்கையின்படி, தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி, ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் முந்தைய விகாரங்களை விட வேறுபட்டவை என்று கூறினார். ஓமிக்ரானின் முக்கிய அறிகுறிகள் குறித்து ஏஞ்சலிக் கோட்ஸீ கூறுகையில், இதில் சோர்வு, உடல்வலி மற்றும் தலைவலி ஆகியவை நோயாளிகளிடம் அதிகம் காணப்படுகின்றன என்றார். இது தவிர, சில நோயாளிகளில் பலவீனம் குறித்த புகார்களும் பதிவாகியுள்ளன. டெல்டா மாறுபாட்டின் மிகப்பெரிய அறிகுறிகளான மூக்கடைப்பு, அதிக காய்ச்சல், வாசனை இழப்பு அல்லது சுவை இழப்பு ஆகியவற்றை இதுவரை எந்த நோயாளியும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது


தொற்றுநோய்க்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனினும், இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்களும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், தடுப்பூசி தீவிர நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. இதனுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இன்னலும் இறப்பு அபாயமும் குறைக்கப்பட்டுள்ளது.


தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் ஓமிக்ரானின் அறிகுறிகள்


அறிக்கைகளின்படி, கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களில் ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் வேறுபட்டு இருக்கின்றன. தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூட்டு வலி, தொண்டை வலி போன்றவை தடுப்பூசி போடப்பட்டவர்களில் காணப்படும் சில அறிகுறிகளாகும்.


மேலும் படிக்க | ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா?


தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்


ஊடக அறிக்கைகளின் படி, தடுப்பூசியைப் பெற்ற பிறகு, நோயெதிர்ப்பு-பாதுகாப்பு அமைப்பு உருவாகிறது. இது வைரசிலிருந்து தப்பிக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாதவர்கள்ளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் தீவிர நோய்கள் உருவாவவதற்குமான அதிக ஆபத்து உள்ளது.


தடுப்பூசி போடாதவர்களில் காணப்படும் ஓமிக்ரான் அறிகுறிகள் 


கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்திக்கொள்ளாதவர்களில், ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் முற்றிலும் வேறுபட்டும் சற்று தீவிரமானவையாகவும் இருக்கின்றன. தடுப்பூசி போடப்படாதவர்கள், கோவிட்-19 இன் பொதுவான அறிகுறிகளுடன் கூடுதலாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும். 


ஓமிக்ரானின் மிகப்பெரிய அறிகுறிகள் 


கோவிட் -19 இன் ஓமிக்ரான் மாறுபாடு டெல்டாவை விட இலகுவானது என்று அறியப்பட்டுள்ளது. பெரும்பாலான பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சளி போன்ற அறிகுறிகள் காணப்பட்டு, பின்னர் அவர்கள் தாங்களாகவே குணமடைவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொண்டை புண் தவிர, சோர்வு, காய்ச்சல், உடல்வலி, இரவில் வியர்த்தல், தும்மல், மூக்கு ஒழுகுதல், குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவை ஓமிக்ரானின் வேறு சில அறிகுறிகளில் அடங்கும். டெல்டா மாறுபாட்டைப் போலன்றி, ஓமிக்ரானில் வாசனை மற்றும் சுவை இழப்பு குறைவாகவே உள்ளது.


அறிகுறிகள் காணப்பட்டால் இதை உடனே செய்யுங்கள் 


கோவிட்-19 தொற்றைக் கண்டறிவதற்கான மிகச் சரியான முறை ஆர்டி-பிசிஆர் சோதனை ஆகும். எனவே இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனேயே உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ளுங்கள். ஜலதோஷத்தின் அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் தொற்று அதிகமாவதைத் தடுக்கலாம். இதனுடன், பரிசோதனை அறிக்கை வந்து, உங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Omicron Alert: கண்கள் காட்டும் இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR