ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகளும் பொதுவான காய்ச்சலின் அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன. இருப்பினும், இரண்டுக்கும் இடையில் சிறிய வேறுபாடுகளும் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகக்குறைந்த வேறுபாடுகள் காரணமாக ஓமிக்ரான் தொற்றை (Omicron) கண்டறிவது கடினமாக உள்ளது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் பொதுவான காய்ச்சல் இரண்டுக்கும் இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பொதுவான அறிகுறிகள் உள்ளன. இந்த நிலையில், இந்த அறிகுறிகள் இருக்கும் நபர், ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா அல்லது அவருக்கு சாதாரண காய்ச்சல்தான் உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது? 


ஒரு வழி, ஓமிக்ரான் பரிசோதனை செய்து அதை கண்டறிவதாகும். 


ஓமிக்ரான் தொற்றை கண்டறிய மருத்துவர்கள் சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்: 


- கோவிட் நோயின் முக்கிய அறிகுறிகள் என்னவென்றால், காய்ச்சல் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு இருக்கும். 


- அதன் பிறகு காய்ச்சல் மறைந்துவிடும். 


ALSO READ | எச்சரிக்கை மணியாக இருக்கும் செயல்பாடுகள்! எளிதில் Corona பாசிட்டிவ் ஆகலாம் 


- இதனுடன் அதிகமான உடல் வலி மற்றும் முதுகுவலி இருக்கும். இது சாதாரண காய்சலில் இருப்பதை விட அதிகமாக இருக்கும். 


- சாதாரண காய்ச்சல் உள்ள நோயாளிகளில் பொதுவாக முதுகுவலி, கடுமையான தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை இருக்காது. 


- ஆனால், இவை கோவிட் நோயின் முதல் மூன்று நாட்களில் மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும். 


கோவிட் நோய்த்தொற்றான ஓமிக்ரானைப் பற்றி மக்கள் அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை, இது தவறான போக்கு என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதில் வெறும் சளி மற்றும் காய்ச்சல்தான் இருக்கும், ஆகையால் கவலை வேண்டாம் என சிலர் மெத்தனமாக இருக்கிறார்கள். கொடுமையான பல விளைவுகளை பார்த்த பிறகும் இன்னும் பலர் முகக்கவசம் கூட அணியாமல் வெளியே செல்கிறார்கள். 


கொரோனா தொற்றை (Coronavirus)ஓரளவுக்கு குறைந்து வரும் நிலையில், அனைத்து வித பாதுகாப்பு நடவடிக்கைகளிய எடுப்பதும், எச்சரிக்கையாக இருப்பதும் மிகவும் அவசியமாகும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.  


ALSO READ | Omicron புதிய அறிகுறிகள்: குணமடைந்தாலும் விடாது துரத்தும் பிரச்சனைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR