அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவல் நிலையில் உள்ளது..!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் INSACOG, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவல் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 23, 2022, 03:52 PM IST
அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவல் நிலையில் உள்ளது..! title=

புதுடெல்லி: இந்தியாவில் 3.33 லட்சத்துக்கும் அதிகமான புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு ( Indian SARS-CoV-2 Genomics Consortium - INSACOG), கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாடு இந்தியாவில் சமூகப் பரவல் நிலையில் இருப்பதாகவும், பல நகரங்களில் புதிய வழக்குகள் மிக அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் பிற நிறுவனங்களால் கூட்டாகத் தொடங்கப்பட்ட  அரசு அமைப்பான INSACOG, ஓமிக்ரானின் தொற்று துணை வகையான  BA.2  வகை தொற்று நாட்டில் கணிசமான அளவில் கண்டறியப்பட்டுள்ளதாக என்று கூறியது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் INSACOG, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், இதுவரை பெரும்பாலான ஓமிக்ரான் வழக்குகள் அறிகுறியற்றவை அல்லது லேசானவை என்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அல்லது ICU-வில் சிகிச்சை போன்ற நிலை ஏற்படுவது அதிகரித்து வருவதால் எச்சரிக்கை தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி மற்றும் மும்பையில் ஒமிக்ரான் பரவல் மிக அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

இந்தியாவில் டிசம்பர் முதல் வாரத்தில் பரவத் தொடங்கிய ஒமிக்ரன், சில வாரங்களிலேயே நாடு முழுவதும் பரவி விட்டது. ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடைந்துள்ளது.  நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,264 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பரவல் அதிகரிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்று நோய்க்கு 21,87,205 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை சுமார் 1.61 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News