Omicron பாதித்த குழந்தைகளில் இருக்கும் தீவிர அறிகுறிகள்: எச்சரிக்கை தேவை
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகவும் குறைவான அறிகுறிகளோ, அல்லது அறிகுறியே இல்லாத நிலையோ இருக்கிறது.
Omicron Symptoms in Children: உலக அளவிலும் இந்திய அளவிலும் டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரான் மாறுபாடு மிக வேகமாக பரவி வருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கொரோனா வைரஸ் (Coronavirus) பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகவும் குறைவான அறிகுறிகளோ, அல்லது அறிகுறியே இல்லாத நிலையோ இருக்கிறது. எனினும், சில சந்தர்ப்பங்களில் இந்த அறிகுறிகள் கடுமையாகவும் இருக்கலாம்.
குழந்தைகளில் கொரோனா அறிகுறிகள்
பெரியவர்கள் மற்றும் வயதானவர்களைப் போலவே, குழந்தைகளிலும் கொரோனாவின் வெவ்வேறு அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகளில் சில மிகவும் பொதுவானவை. காய்ச்சல் (Fever), சோர்வு, இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை குழந்தைகளுக்கு கொரோனாவின் பொதுவான அறிகுறிகளாகும்.
கடுமையான அறிகுறிகளும் தோன்றக்கூடும்
குழந்தைகளுக்கு மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் (MIS-C) இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு இதயம், நுரையீரல், இரத்த நாளங்கள், சிறுநீரகம், செரிமான அமைப்பு, மூளை, தோல், கண்கள் போன்ற பல உறுப்புகளில் கடுமையான வீக்கம் ஏற்படுகிறது.
ALSO READ | Omicron தொற்றை எதிர்த்து போராட ஆயுர்வேதம் அளிக்கும் அற்புத வீட்டு வைத்தியங்கள்
சமீபத்திய அறிக்கைகளின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஓமிக்ரான் (Omicron), குரூப் என்ற வியாதியை உருவாக்குகிறது. இது தொடர் இருமலை ஏற்படுத்துகிறது.
சுவாச பாதை தொற்று
- மருத்துவர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேல் சுவாசக் குழாயில் தொற்று ஏற்படலாம்.
- இது குரூப்பை ஏற்படுத்துகிறது.
- சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்று சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
- இதனுடன், காய்ச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் சுவாசிக்கும்போது சத்தம் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. இவற்றை ஏற்றுக்கொண்டு பின்பற்ரும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Omicron தொற்றின் புதிய அறிகுறிகள்: இவை இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR