Omicron Symptoms in Tamil: கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் டெல்டா மாறுபாட்டில் (Delta Variant) குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒமிக்ரான் வகையிலும் குழந்தைகள் அதிகம் பாதிப்பு அடைவதை காணப்படுகின்றனர். தரவுகளின்படி, புதிய வைரஸான ஒமிக்ரானால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற சில தீவிரமான அறிகுறிகள் குழந்தைகளிடம் தென்படுவதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, குழந்தைகளில் இந்த நோய்த்தொற்றின் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த  (Omicron Variantஅறிகுறிகளை நீங்கள் கண்டால், எச்சரிக்கையாக இருங்கள்:
சோர்வு
தலைவலி
தொண்டை வலி
மூக்கு ஒழுகுதல்
தும்மல்


ALSO READ | Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ 


இந்த அறிகுறிகள் குழந்தைகளிலும் காணப்படுகின்றன:
ஒமிக்ரான் நுரையீரலில் மட்டுமல்ல, பல உறுப்புகளிலும் நிகழ்கிறது. குழந்தைகளிடம் சோர்வு, தலைவலி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தும்மல் தவிர, பல வெவ்வெறு அறிகுறிகளும் தென்படுகிறது. அதாவது வயிற்றில் வலி மற்றும் உடலில் சொறி போன்றவை ஆகும்.


இந்த அறிகுறிகள் அரிதானவை என்றாலும், அவை பல குழந்தைகளுடன் காணப்படுகின்றன. தரவுகளின்படி, ஒமிக்ரான் அறிகளில் முக்கிய அறிகுறியாக வறண்ட இருமல் குழந்தைகளிடையே காணப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவது அவசியம். மேலும், முகமூடிகள், சானிடைசர்கள் பயன்படுத்த கற்றுக்கொடுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | COVID Ear: கொரோனாவினால் காது வலி - இரைச்சல்? மருத்துவர் கூறுவது என்ன!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR