கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.  இந்தியாவில் ஆரம்பத்தில் கர்நாடகாவில் தான் 2 நோயாளிகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.  ஆனால் தற்போது இவை பல மடங்காக பெருகியதோடு நாட்டிலுள்ள 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இவை பரவியுள்ளது.  இந்தியாவில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்கள் குறித்து ஆராய்கையில் டெல்லி இரண்டாமிடத்தில் உள்ளது தெரிகிறது.  அங்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சிகிச்சையளித்த மருத்துவர்கள் இந்நோயின் பரவல் பற்றி கூறுகையில், டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.  அதில் அதிகளவில் வெளிநாட்டவர்களுக்கு தான் கொரோனா தொற்று உறுதியாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்


மேலும் இதில் ஏராளமானோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், சிலரோ பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்.  இந்த தொற்றுக்கு உள்ளவர்களில் பாதி பேருக்கு தான் தொண்டை வலி, காய்ச்சல், உடம்பு வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது, கிட்டத்தட்ட 90% பேருக்கு அறிகுறிகள் ஏற்படுவதில்லை என்று ஆய்வின் மூலம் தெரிகிறது.  இதனால் இவர்களுக்கு வழக்கமாக கொடுக்கும் சத்து மாத்திரைகள், பாராசிட்டமால் போன்ற சாதாரண மாத்திரைகளை தான் கொடுக்கிறோம், இதுவே அவர்களுக்கு போதுமானது.  மேலும் தலைமை மருத்துவ அதிகாரி ரிது சக்சேனா கூறுகையில்,  தொண்டை வலி, காய்ச்சல், உடம்பு வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பாராசிட்டமால் மற்றும் சில ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்கிறோம், அறிகுறி தென்படாதவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகளையே கொடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.  



மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் வரையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திடவும், 3 லட்சம் பேருக்கு தினசரி தொற்றை பரிசோதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த வைரஸானது வேகமாக பரவி வருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.


தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் கூறுகையில், தற்போது போடப்படும் தடுப்பூசிகள் நிச்சயம் ஒமிக்ரான் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும், ஆனால் தடுப்பூசி போடாத அவர்களுக்கு 100% இந்நோயின் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளார்.  மேலும் தடுப்பூசியை மட்டுமே முழுவதுமாக நம்பி இருந்துவிடக்கூடாது.  மனிதர்கள் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களும் நோய் பாதிப்புடன் தொடர்புடையது. அதனால் முககவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தால் ஆகியவற்றை தவறாமல் செய்து வர வேண்டும் என்று மருத்துவர் கோட்ஸி கூறியுள்ளார்.


ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR