Tips for men: ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல முறைகளை பின்பற்றுகிறார்கள். ஏனெனில் வயது முதிர்வு, புகைபிடித்தல், உடல் பருமன், மது அருந்துதல், உடல் உழைப்பு இல்லாமை போன்றவற்றால் ஆண்களின் ஆரோக்கியம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானி இது குறித்து கூறுகையில், ஆண்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆன தீர்வு உணவில் மறைந்துள்ளது என்றும், ஆண்கள் இரவில் ஒரு கப் காபி குடிப்பதன் மூலம் பாலியல் பலவீனம் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் எனவும் கூறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Men's Health:  இரவில் 1 கப் காபி குடிப்பதால் ஆண்களின் பாலியல் பிரச்சனை நீங்கும்


இரவில் 1 கப் காபி குடிப்பது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்கிறார் டாக்டர் அப்ரார் முல்தானி. ஏனெனில், இதில் உள்ள காஃபின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக ஆண்களின் செயல்திறன் மேம்படும். தினமும் காபியை அளவாக உட்கொள்வது ஆண்மைக் குறைவு பிரச்சனையையும் தீர்க்கும்.


PLOS ONE இதழில் வெளியான ஒரு ஆய்வும், காபி ஆண்களுக்கான ஆரோக்கியத்தில் சிறந்த நன்மையை ஏற்படுத்தும் என கூறுவதாக டாக்டர் முல்தானி கூறுகிறார். இதில் காபி சாப்பிடாத ஆண்களை விட தினமும் காபி குடிக்கும் ஆண்களிடம் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் மிக குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!


Important Foods for Men: ஆண்களுக்கான முக்கியமான உணவுகள்


காபி தவிர, பின்வரும் உணவுகளும் ஆண்களுக்கு நன்மை பயக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். 


1. வாதுமை கொட்டை- வால்நட் எனப்படும் வாதுமை கொட்டைகளில் தாமிரம், ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6, மாங்கனீஸ், வைட்டமின் ஈ உள்ளது.


2. திராட்சை - நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன


3. அத்திப்பழம் - நார்ச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், இரும்பு சத்து நிறைந்துள்ளது


4. ஆப்பிள்கள் - நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, பொட்டாசியம் நிறைந்துள்ளது.


5. வாழைப்பழம் - கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன.


(பொறுப்பு துறப்பு : இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. கல்வி கற்பதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)


ALSO READ | Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR