Boost Brain Function: இதை சாப்பிட்டா மூளை ஒழுங்கா வேலை செய்யும்
Keep Your Brain Young: மூளையின் இயக்கத்திற்கு குறிப்பாக தூங்குவது மற்றும் விழிப்பதற்கு காரணமான ஓரெக்சின் செல்கள் ஒழுங்காக வேலை செய்ய தேவையான உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்
Boost Brain Memory Power: உணவுப்பழக்கம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். பொதுவாக உணவே ஆரோக்கியம் என்று சொல்வார்கள். உணவு உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது என்றாலும், ஆற்றலின் தரத்தையும் தீர்மானிக்கிறது. ஓரெக்சின் செல்கள் அல்லது ஹைபோகிரெடின் மனித உடலின் மூளையில் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியின் முக்கிய மாடுலேட்டர்கள் ஆகும். உணவு மற்றும் ஓரெக்சின் செல்கள் மற்றும் அது மனித நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
எண்ணங்கள் நம்மை தூங்கவிடாமல் அலைகழிக்கிறதா? உடற்பயிற்சியை தவறவிட்டீர்களா? எதுவாயிருந்தாலும் அது நமது விருப்பம் என்றும், நமது செயல்களுக்கும் பெருமைகளுக்கும் நாமே காரணம் என்று பலர் பெருமைப்படலாம். ஆனால், நடைமுறையில் நம்முடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு தேவையான ஆனால் முக்கியமான எளிய விஷயங்களைக் கூட நாம் எப்படியாவது தவற விடுகிறோம். செயல்படும்போதும், செயல் இல்லாமல் இருக்கும்போதும் நமது மூளையை சரியாக இயங்க வைப்பதற்கு மன உறுதி மட்டுமே போதுமானது.
மேலும் படிக்க | ஆரோக்கிய நன்மை அதிகமாக உள்ள ஐஸ் டீ
ஆனால், மக்களில் நான்கில்ஒருவர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணமான மூளை சமிக்ஞைகள் நமது ஆழ் மனதில் இயங்குகின்றன. அது நமது மனதின் கட்டுப்பாட்டில் இல்லை. நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரிசமமான நிலையில் இல்லை என்றால், அது மூளையின் ஆரோக்கியத்திலும், அதன் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கிறது.
ஓரெக்சின் செல்கள் என்றால் என்ன?
நமது மூளையின் ஆழமான பகுதிகளான ஹைபோதாலமஸ், ஓரெக்சின் அல்லது ஹைபோகிரெடினை உருவாக்குவதற்கு பொறுப்பாகும், இது நமது மூளைக்கு முக்கியமான விழிப்பு சமிக்ஞையை அனுப்புவதாக அறியப்படுகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்த ஆழ் சமிக்ஞைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய ஆய்வுகள், பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.
ஓரெக்சின் செல்கள் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இது மூளை மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகள் பற்றிய ஆராய்ச்சியை மாற்றியுள்ளது. ஓரெக்சின் செல்கள், மறதி, தூக்கக் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது.
நார்கோலெப்ஸி என்பது மூளையின் நிலையின் ஒரு பகுதியாகும், இது மூளையின் நிலைகளுக்கு இடையில் அசாதாரணமாக அடிக்கடி மாறுதல்கள் மற்றும் தூக்கம் அல்லது விழிப்புணர்வைத் தக்கவைக்க இயலாமை ஆகியவற்றுக்கு காரணமாகிறது. ஓரெக்சின் செல் தூண்டுதல் விழிப்புணர்வை உருவாக்குகிறது மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
ஓரெக்சின் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது நமது இதயம் மற்றும் பிற உறுப்புகளைப் போலவே செயல்படுகிறது என்றும் சிலர் கூறுகிறார்கள். ஓரெக்சின் செல்கள், நடத்தையில் எந்த அளவு கட்டுப்பாடு கொண்டுள்ளது என்றும், அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஓரெக்சின் செல்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் உணவின் பங்கு
உணவுகளின் மூலம், ஓரெக்சின் செல்கள் சிக்னல்களின் தீவிரம் டியூன் செய்யப்படலாம் அல்லது பாதிக்கப்படலாம். ஓரெக்சின் செல்கள் சர்க்கரை மற்றும் சில அமினோ அமிலங்கள் போன்ற சில உணவு மேக்ரோநியூட்ரியண்ட்களின் உடலின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு எதிர்வினை புரிகின்றன.
ஓரெக்சின் செல்களுக்கு சக்திவாய்ந்த தடுப்பான் குளுக்கோஸ் ஆகும். உடலில் குளுக்கோஸின் அளவு உயரும் போது, செல்கள் தங்கள் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சமிக்ஞைகளை உருவாக்குவதை நிறுத்துகின்றன. இதற்கு நேர்மாறாக, உணவில் உள்ள அமினோ அமிலங்கள், ஓரெக்சின் செல்களை தூண்டும் ஆற்றல் வாய்ந்தவை. முட்டை அல்லது டோஃபு போன்ற புரதங்களைக் கொண்ட பெரும்பாலான உணவுகளும் இந்த ஒரெக்சின் செல்களை ஊக்குவிக்கின்றன. ஓரெக்சின் செல்கள் விழித்திருக்க போதுமான தூண்டுதல்கள் வழங்கப்பட்டால், நமது மூளையும் விழித்திருக்கும். போதுமான உணவை உட்கொள்ளாதவர்கள் மயக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR