அளவிற்கு அதிகமான வைட்டமின் மாத்திரைகள் பேராபத்து... எச்சரிக்கும் உணவியல் நிபுணர்!
உடலில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும் போது அதன் உணவு மூலமாகவும், சப்ளிமெண்ட் மாத்திரைகள் வடிவிலும் அதனை எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
வைட்டமின்களை அதிகமாக எடுத்துக்கொள்ளலாமா, அதனால் பாதிப்பு ஏதேனும் வருமா என்ற கேள்வி பலர் மனதிலும் எழத்தான் செய்கிறது... அனைத்து ஊட்டச்சத்துக்களைப் போலவே, வைட்டமின்களும் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். விட்டமின்கள் குறைபாடு ஏற்படுவது நல்லதல்ல. குறைபாடு காரணமாக பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். உடலில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும் போது அதன் உணவு மூலமாகவும், சப்ளிமெண்ட் மாத்திரைகள் வடிவிலும் அதனை எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால் வைட்டமின்களை அதிகமாக உட்கொண்டாலும் நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதைப் பற்றி அறிய, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவிடம் பேசுகையில், அது அது குறித்து விவரமாக எடுத்துரைத்தார்.
உணவியல் நிபுணர் ஆயுஷி கூறிய தகவல்கள்:
டாக்டர் ஆயுஷி யாதவ் கூறுகையில், 'உணவுகள் மூலம் இயற்கையாக வைட்டமின்களை உட்கொள்ளும் போது, அதிக அளவில் சாப்பிட்டாலும், இந்த சத்துக்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அதன் செறிவூட்டப்பட்ட அளவை சப்ளிமெண்ட்ஸ் அதாவது மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்கள் வடிவில் உட்கொள்ளும்போது, அதிகப்படியான அளவு கடுமையான விளைவுகள் வரலாம்.
அதிகப்படியான வைட்டமின்களின் பக்க விளைவுகள்
வைட்டமின் ஏ (Vitamin A)
அதிகப்படியான விட்டமின் ஏ மாத்திரைகள் காரணமாக, நச்சுத்தன்மை, அல்லது ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ ஆகியவை ஏற்படலாம். வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் மாத்திரைகள் அதிக அளவு சாப்பிடுவதால் இது ஏற்படும். இதற்கான அறிகுறிகளில் வாந்தி, அதிகரித்த உள்விழி அழுத்தம் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
வைட்டமின் B3 (Vitamin B3)
வைட்டமின் B3 நியாசின் என்றும் அழைக்கப்படுகிறது. நிகோடினிக் அமிலமாக எடுத்துக் கொள்ளும் நிலையில், நியாசின் தினமும் 1-3 கிராம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அதிக ரத்த அழுத்தம், வயிற்று வலி, பார்வை இழப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் B6 (Vitamin B6)
வைட்டமின் பி6 பைரிடாக்சின் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு அதிகப்படியான அளவில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, கடுமையான நரம்பியல் அறிகுறிகள், தோல் புண்கள், ஒளியின் உணர்திறன் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும், அவற்றில் சில ஒரு நாளைக்கு 1-6 கிராம் வரை ஏற்படும்.
வைட்டமின் B9 (Vitamin B9)
வைட்டமின் B9, ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு சப்ளிமெண்டாக அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டால் மன ஆரோக்கியத்தையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும்.
வைட்டமின் பி12 ( Vitamin B12)
வைட்டமின் பி 12 ஐ அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும், அது சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேறும். இருப்பினும், அதிகமாக சாப்பிடுவதால் தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படும்.
வைட்டமின் சி (Vitamin C)
வைட்டமின் சி மற்ற ஊட்டச்சத்துக்களை விட குறைவான நச்சுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்புகள் மற்றும் வாந்தி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
வைட்டமின் டி (Vitamin D)
வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸின் அதிகப்படியான நச்சுத்தன்மை எடை இழப்பு, பசியின்மை மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உள்ளிட்ட ஆபத்தான அறிகுறிகளை ஏற்படுத்தும். இது இரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கலாம்., இது இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும்.
வைட்டமின் ஈ (Vitamin E)
நீங்கள் அதிகப்படியான வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்டால், அது இரத்தம் உறைதல், ரத்தக்கசிவு மற்றும் ஹெமோர்ஹாஅஜிக் ஸ்ட்ரோக் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
வைட்டமின் கே (Vitamin K)
வைட்டமின் கே அதிகமாக இருந்தால், நச்சுத்தன்மை எற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் இது வார்ஃபரின் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற சில மருந்துகளுடன் சேர்ந்தால் எதிர் வினை புரியலாம்.
மேலும் படிக்க | Health Alert: முட்டையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ