புதுடில்லி: ஹவுரா - தில்லி பாதையில் பயணிக்கும் பவானி எக்ஸ்பிரஸ் (ரெயில் எண் 12303) -ல் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியில் ஒரு பல்லி கண்டெடுகப்ட்டது. இதுக்குறித்து சக பயணிகள் ஒருவர் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டனாபூர் பிரிவு டிஆர்எம் கிஷோர் குவான் கூறுகையில், "தனபூர் பிரிவில் பதிக்கப்பட்ட பயணிக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டதாகவும், விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்தார். ஆயினும், தமக்கு தாமதமாகவே மருந்து வழங்கப்பட்டதாக பதிக்கப்பட்ட பயணி தெரிவித்தார்.


சி.ஏ.ஜி செயல்திறன் தணிக்கைப் அறிக்கையின் படி, சுத்திகரிக்கபடாத தண்ணீர் சமையலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், திறந்த வெளியில் உணவுகள் வைக்கபடுவதகவும், சமையலறையில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் அதிகளவில் தென்படுவதவும் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் இவறிக்கையனது, 74 ரயில் நிலையங்கள், 80 ரயில்களில் ஆய்வு செய்த பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளது.


ரயில்வே நிலையங்களில் விற்கப்படும் உணவு "மனித நுகர்வுக்கு தகுதியற்றது" என்பதோடு, ரயில்வே கேட்டரிங் நிலையங்களில் சுகாதார தரநிலைகள் குறைவாக இருப்பதாக ஜூலை 21 ம் தேதி சமர்ப்பித்த அறிக்கையில் இந்திய கம்யூட்டர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.