மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை.  மஞ்சளில் குர்குமின் உள்ளதால், பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்தில் இது முக்கியமான ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. வலியை போக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால், சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் மிகுந்த கவனம் தேவை. இதைச் செய்யாவிட்டால், மஞ்சளால் ஏற்படும் பக்கவிளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சள் இல்லாமல் பருப்பு அல்லது காய்கறி சமைக்கவே முடியாது எனலாம். காய்கறிகள் அல்லது பருப்புகளில் மஞ்சள் நிறம் உணவிற்கு ஈர்க்கும் வகையிலான தோற்றத்தை கொடுக்கும். மஞ்சள் ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான மசாலா என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்துகிறது. ஆனால் நன்மைகளுடன், மஞ்சளை உட்கொள்வது சிலருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? அதன் அதிகப்படியான நுகர்வு பல சிக்கல்களை ஏற்படுத்தும். எந்தெந்த சூழ்நிலைகளில் மஞ்சளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.


இரத்த சோகை நோயாளிகள்: 


இரத்த சோகையால் அவதிப்படுபவர்களும் மஞ்சளை அளவாக உட்கொள்ள வேண்டும். உண்மையில், மஞ்சளை அதிகமாக உட்கொள்வது உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை பாதிக்கிறது. மற்றும் இது இரத்த சோகையை அதிகரிக்கும் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.


மேலும் படிக்க | Amla Health Benefits: தினமும் இரண்டு நெல்லிக்காயை இப்படி சேர்த்துகிட்டா, உலக அழகி நீங்க தான்!


மஞ்சள் காமாலை நோயாளிகள்:


நீங்கள் மஞ்சள் காமாலை நோயாளியாக இருந்தால், யோசித்த பின்னரே மஞ்சளை உட்கொள்ளுங்கள். பொதுவாக, மஞ்சள் காமாலையின் போது மஞ்சளைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் கேட்கிறார்கள். ஏனெனில் மஞ்சள் அதிகம் சாப்பிடுவதினால் சீரம் பிலிரூபின் அளவு அதிகரிக்கும். எனவே நீங்கள் மஞ்சள் காமாலை நோயாளியாக இருந்தால், அதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.


பித்தப்பையில் கல் உள்ள நோயாளிகள்: 


பித்தப்பையில் அடிக்கடி கற்கள் உருவாகும் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை அளவோடு சாப்பிடுவது நல்லது. உண்மையில், மஞ்சளில் அதிக அளவு கரையக்கூடிய ஆக்சலேட்டுகள் உள்ளன, அவை கால்சியத்துடன் எளிதில் பிணைக்கப்பட்டு கரையாத கால்சியம் ஆக்சலேட்டை உருவாக்குகின்றன. கரையாத கால்சியம் ஆக்சலேட் 75% கற்களை உருவாக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, அவர்கள் மஞ்சளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது. மேலும், அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.


இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள்: 


இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் மஞ்சளையும் குறைவாக உட்கொள்ள வேண்டும். மஞ்சளும் அதே வழியில் செயல்படுவதால், அதை மருந்துகளுடன் சேர்த்து உட்கொண்டால் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மூக்கில் அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் இரத்தப்போக்கு ஏற்படும் நிலை உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும், இல்லையெனில் அளவிற்கு அதிகமான மஞ்சளால் இரத்தப்போக்கு அதிகரித்து உடலில் இரத்த சோகை ஏற்படலாம். இது பின்னர் பலவீனத்திற்கு காரணமாகிவிடும்.


நீரிழிவு நோயாளிகள்: 


சர்க்கரை நோய்க்கும் மஞ்சளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும், பொதுவாக நீரிழிவு நோயாளிகள் பலர் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் மஞ்சளை அதிகமாக உட்கொள்வதை ஆயுர்வேதம் அறிவுறுத்தவில்லை. ஏனெனில் மஞ்சளுக்கும் ரத்தத்தை மெலிதாக்கும் பணபு உண்டு. ரத்தத்தை நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால், அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது, இது உடலுக்கு நல்லதல்ல.


(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Health Alert: புரத பவுடரை அதிகமா சேர்த்துகிட்டா என்னவெல்லாம் பிரச்சனை வரும்? பகீர் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ