குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்கும் ஜாக்கிரதை!! இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்
Piles Cure in Winter: குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் என்றும், இந்த சீசனில் வரும் நோயை எப்படி தடுப்பது என்றும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பைல்ஸை கட்டுப்படுத்த டிப்ஸ்: குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த பருவத்தில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களை கவனிக்கவில்லை என்றால், பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதனால் வரும் தொல்லை சற்று அதிகமாக இருக்கும். நாட்டிலும் உலகிலும் பைல்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நோய்க்கு மலச்சிக்கல் முக்கிய காரணமாக உள்ளது. மலச்சிக்கல் காரணமாக பைல்ஸ், ஃபிஷர் மற்றும் ஃபிஸ்துலா போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன. பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆசனவாயின் நரம்புகள் வீங்கத் தொடங்குகின்றன.
பைல்ஸ் பிரச்சனை ஏன் வருகிறது?
பைல்ஸ் நோயாளிகளுக்கு ஆசனவாயின் உள்ளேயும் வெளியேயும் வீக்கம் ஏற்படுகிறது. பல சமயங்களில், மலம் வெளியேறும் அழுத்தம் காரணமாக, தசைகள் வெளியேறத் தொடங்குகின்றன. மேலும் அவற்றிலிருந்து ரத்தப்போக்கும் ஏற்படத் தொடங்குகின்றது. வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காரமான உணவுகள், ஆல்கஹால், பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை உணவில் உட்கொள்வது பைல்ஸ் பிரச்சனையை அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் என்றும், இந்த சீசனில் வரும் நோயை எப்படி தடுப்பது என்றும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை ஏன் அதிகரிக்கிறது?
குளிர்காலத்தில் மூல நோய் பிரச்சனையால் அதிக பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த பருவத்தில், இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாக இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இந்த சீசனில் பைல்ஸைக் கட்டுப்படுத்த உணவில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.
மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த 5 உணவுகளை டயட்டில் சேருங்கள்
டிசம்பர் முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பைல்ஸ் பாதிப்பு 30 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆகையால் குளிர் காலத்தில் நமது உடலில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
குளிர்காலத்திற்கான பைல்ஸ் சிகிச்சை:
- நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டாம், அப்படி செய்வது தசைகள் மீது அழுத்தத்தை கொடுக்கிறது.
- இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். இறுக்கமான ஆடைகளை அணிவது பிரச்சனையை அதிகரிக்கும்.
- குளிர்காலத்தில் மூல நோய் அதிகரிப்பதை கட்டுப்படுத்த உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். பகலில் தண்ணீர் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
- உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதன் மூலம் குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனையை தவிர்க்கலாம்.
- சிட்ஸ் குளியல் இந்த பிரச்சனைக்கு சிறந்த பாரம்பரிய வைத்தியமாக கருதப்படுகின்றது. இதில் ஆசனவாய் முழுவதுமாக நனையும் படி வெந்நீரில் அமர வேண்டும். 15 நிமிடங்கள் இப்படி அமர்ந்து இருப்பது வலி மற்றும் அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யுங்கள்.
- மலச்சிக்கலை தவிர்க்கவும். மலச்சிக்கலைத் தடுக்க, பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- குளிர்காலத்தில் காபி அருந்துவதைக் குறைக்கவும்.
- உணவில் கொழுப்பு, எண்ணெய் மற்றும் க்ரீஸ் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
குளிர்காலத்தில் உணவில் பழச்சாறு மற்றும் காய்கறி சாறுகளை உட்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மூல நோயால் அவதியா? இந்த இரு ஆசனங்கள் மூலம் நிவாரணம் காணலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR