பைல்ஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த 5 உணவுகளை டயட்டில் சேருங்கள்

Piles Diet: முதுமை, நாள்பட்ட மலச்சிக்கல், கர்ப்பம், வயிற்றுப்போக்கு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினசரி உட்கொள்வதன் விளைவாக மலக்குடலின் கீழ் பகுதி சேதமடைகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 24, 2022, 07:13 PM IST
  • மூல நோய், இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு நோயாக உருவெடுத்து வருகிறது.
  • இதனால் மலம் கழிக்கும்போது வலி, அசௌகரியம் மற்றும் எரிச்சல் ஏற்படுகின்றது.
  • இது மலம் கழிக்கும்போது மட்டுமின்றி, எப்போது வெண்டுமானாலும் ரத்தக்கசிவை ஏற்படுத்தக்கூடும்.
பைல்ஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த 5 உணவுகளை டயட்டில் சேருங்கள் title=

பைல்ஸில் சாப்பிட வேண்டிய உணவுகள்: பைல்ஸ் எனப்படும் மூல நோய், இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு நோயாக உருவெடுத்து வருகிறது. இதனால் மலம் கழிக்கும்போது வலி, அசௌகரியம் மற்றும் எரிச்சல் ஏற்படுகின்றது. மலக்குடல் பகுதியில் உள்ள நரம்புகளின் வீக்கம் காரணமாக இது ஏற்படுகிறது. பைல்ஸில் உட்புற பாதிப்பு வெளிப்புற பாதிப்பு என இரு வகைகள் உள்ளன. சிலர் இரண்டு வகைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். முதுமை, நாள்பட்ட மலச்சிக்கல், கர்ப்பம், வயிற்றுப்போக்கு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினசரி உட்கொள்வதன் விளைவாக மலக்குடலின் கீழ் பகுதி சேதமடைகிறது. மலம் கழிக்கும்போது மட்டுமின்றி, எப்போது வெண்டுமானாலும் இது ரத்தக்கசிவை ஏற்படுத்தக்கூடும். 

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோயின் பாதிப்பை சரி செய்ய அவர்களது உணவைக் கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பைல்ஸ் நோயை சிறந்த முறையில் சமாளிக்க உதவும் சில உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பைல்ஸ் நோயாளிகளுக்கான 5 பயனுள்ள உணவுகள்:

பைல்ஸ் பிரச்சனையால் சிரமப்படும் நோயாளிகள் இந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் செரிமான ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதோடு குடல் இயக்கத்திற்கும் உதவுகின்றன. 

மேலும் படிக்க | மூல நோய்க்கு 'குட்பை' சொல்லணுமா? அப்ப இதையெல்லாம் உணவிலிருந்து விலக்கிடுங்க 

முழு தானியங்கள்: 

பைல்ஸ் நோயால் அவதிப்படுபவர்கள், தவிட்டு தானியங்கள், பழுப்பு அரிசி, ஓட்ஸ், முழு கோதுமை பாஸ்தா போன்ற ஆரோக்கியமான முழு தானியங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை நார்ச்சத்து நிறைந்தவை. மேலும் இவை மலத்தை மென்மையாக்குகின்றன, வலியைக் குறைக்கவும் உதவுகின்றன.

பச்சைக் காய்கறிகள் / கீரை வகைகள்: 

பச்சைக் காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை செரிமானத்திற்கு உதவும். மூல நோய் ஏற்பட்டால் ​​செரிமான அமைப்பை வலுப்படுத்துவது அவசியமாகும். ப்ரோக்கோலி, முளை கட்டிய தானியங்கள், கேரட், பிரஸ்ஸல்ஸ் முளைகள், முட்டைக்கோஸ், தக்காளி, அஸ்பாரகஸ், காலிஃபிளவர், வெங்காயம், வெள்ளரி ஆகியவை பைல்ஸ் நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய சில காய்கறிகளாகும்.

பழங்கள்: 

பழங்களில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் குடல் இயக்கத்தை சீராக்க இவை உதவுகின்றன. ஆப்பிள், கொடிமுந்திரி, திராட்சை, பெர்ரி போன்ற பழங்களை தோலுடன் சேர்த்து உண்ணலாம். இவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும். பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை தோல் இல்லாமல் சாப்பிடுவதும் நல்லது.

ராஜ்மா, காராமணி 

ராஜ்மா, காராமணி, பச்சை பட்டாணி, மொச்சை ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பைல்ஸ் நோயாளியின் வழக்கமான உணவில் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

தண்ணீர்: 

இது ஒரு உணவாக இல்லாவிட்டாலும், பைல்ஸ் சிகிச்சைக்கு தண்ணீர் இன்றியமையாத பொருளாகும். தினமும் குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இது குடல் இயக்கம் சீராக இயங்க உதவுகிறது.

மேலும் படிக்க | புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா? இதை படித்தால் இன்றே விட்டுவிடுவீர்கள்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News