புது டெல்லி: ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டுக்குப் (One Nation-One Ration Card) பிறகு, அரசாங்கம் இப்போது ஒன் நேஷன் ஒன் ஹெல்த் கார்டைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த ஆதாரங்கள்படி, பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தன்று (Indian Independence Day) செங்கோட்டையில் இருந்து, இந்த ஹெல்த் திட்டம் குறித்து அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.  நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் சுகாதார பதிவுகளை டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கும் நோக்கத்திற்காக இதை மத்திய அரசாங்கம் தயாரித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன் நேஷன் ஒன் ஹெல்த் கார்டு என்றால் என்ன?
மத்திய அரசாங்கத்தின் ஒன் நேஷன் ஒன் ஹெல்த் கார்டு (One Nation One Health Card) திட்டத்தின் மூலம், அனைவருக்கும் ஒரு சுகாதார அட்டை இருக்க  வேண்டும் என்பதாகும். இதன் கீழ் சிகிச்சை பெறும் பரிசோதனை மற்றும் நோய் பற்றிய முழுமையான தகவல்கள் இந்த அட்டையில் டிஜிட்டல் (Digital) முறையில் சேமிக்கப்படும். இது குறித்த பதிவு வைக்கப்படும். இதன் மிகப் பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் நாட்டில் உள்ள எந்த மருத்துவமனை அல்லது மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் செல்லும்போது, ​​நீங்கள் அனைத்து மருந்து மற்றும் சோதனை அறிக்கையையும் கூடவே எடுத்து செல்லவேண்டிய அவசியமில்லை. உங்கள் தனித்துவமான ஐடி மூலம் மருத்துவர் எந்த இடத்திலும் இருந்து அனைத்து மருத்துவ பதிவுகளையும் பார்க்க முடியும்.


ALSO READ |  நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு Health ID System அறிமுகம்... அதன் சிறப்பு என்ன?


பதிவு சேவையகத்துடன் இணைக்கப்படும்:
மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருத்துவர்கள் மத்திய அரசின் சேவையகத்துடன் இணைக்கப்படுவார்கள். மருத்துவமனை மற்றும் குடிமக்களைப் பொறுத்தவரை, அவர்கள் இந்த பணியில் சேர விரும்புகிறார்களா இல்லையா என்பது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனிப்பட்ட தனித்துவமான ஐடி வழங்கப்படும்.


இதற்காக முதல் கட்ட பட்ஜெட் ₹ 500 கோடியாக இருக்கும்: 
ஆதார் அட்டையின் அடிப்படையில் சுகாதார அட்டை (Health Card) தயாரிக்க பரிந்துரைக்கப்படும். ஆனால் குடிமக்கள் யாரும் இதற்கு கட்டாயப்படுத்த மாட்டார்கள். இது முற்றிலும் உங்கள் விருப்பமாக இருக்கும். ஒருவர் விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் இல்லையென்றால் அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாகவும் தனிப்பட்டதாகவும் வைத்திருக்க முழு கவனம் செலுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் சுகாதார சூழலை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.


ALSO READ | ஆக்சிஜன் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் கொரோனாவை விரட்டுமா?


நோயாளியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் சுகாதார விவரங்கள் திறக்கப்படும்
ஆதாரங்களின்படி, மருத்துவர்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், மருத்துவ கடைகளும், மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் மத்திய சேவையகத்துடன் இணைக்கப்படும். ஒருவரின் தனியுரிமையை முழுமையாக பாதுகாக்கப்படும். எந்தவொரு நபரின் சுகாதார சுயவிவரமும் அவரது ஒப்புதலுடன் மட்டுமே மருத்துவர் அல்லது மருத்துவமனை ஊழியர்களைப் பார்க்க முடியும்.