நாட்டில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி பிரதமர் மோடியை சாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆக்ஸிஜன், படுக்கைகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் தங்கள் உற்றார் உறவினரை இழந்தவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமையன்று அவர் வெளியிட்ட டிவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.



"நாடாளுமன்றத்தையும் பத்திரிகைகளையும் எதிர்கொள்ள பிரதமர் பயப்படுகிறார். கல்லறைகளையும் (cemetery) மற்றும் சுடுகாடுகளையும் (burial grounds) பற்றி அவர் பல மணி நேரம் பேச முடியும். ஆனால் மருத்துவமனைகளைப் பற்றி ஒருபோதும் பேச முடியாது. ஆக்ஸிஜன், படுக்கைகள் பற்றாக்குறையால் அன்புக்குரியவர்களை இழந்த மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். தவிர்த்திருக்கக்கூடிய இந்த துன்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும்”என்று ஒவைசி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  


Also Read | காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடைபெற்றன - இஸ்ரேலிய ராணுவம்


மத்திய அரசின் கோவிட் தடுப்பூசி கொள்கையை விமர்சித்த ஓவைசி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் கிடைக்க அனுமதித்திருக்க வேண்டும் என்று கூறினார்.


"பிரதமரின் தடுப்பூசி விலைக் கொள்கை முதன்மையானது வாழ்க்கை உரிமையை மீறுவதாக உச்சநீதிமன்றம் கூறியது. போதுமான தடுப்பூசி ஆர்டர்கள் ஏன் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படவில்லை? நம்மிடம் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்று தெரிந்தபோதும், மோடி தனது புகைப்படங்கள் அச்சிடப்பட்ட தடுப்பூசிப் பெட்டிகளை ஏன் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு அனுப்பினார்? வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் கிடைக்க பிரதமர் ஏன் அனுமதிக்கவில்லை? தடுப்பூசிகளுக்கு ஏன் ஜிஎஸ்டி (GST) வசூலிக்கிறீர்கள்? உங்கள் பேரழிவு தரும் தடுப்பூசி கொள்கையை மாநில அரசுகள் மீது ஏன் திணிக்கிறீர்கள்?" என அடுக்கடுக்காய் பல கேள்விகளை ஒவைசி தனது டிவிட்டர் பதிவில் எழுப்பியிருக்கிறார்.


Also Read | தனது முதல் டிவிட்டர் பதிவில் தமிழக முதலமைச்சரை வாழ்த்திய இயக்குநர் பாலா! 


தடுப்பூசிக்கான பதிவுக்கான எளிமையான நடைமுறை தேவை என்று ஓவைசி வலியுறுத்துகிறார். அதோடு, தடுப்பூசி நடவடிக்கைகளை நிறைவேற்றுவதை மாநிலங்களும் பரவலாக்க வேண்டும் என்று ஓவைசி பரிந்துரைத்தார். 


"இலவச மற்றும் உலகளாவிய தடுப்பூசி நமக்குத் தேவை. கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது மத்திய அரசின் வசம் இருந்தாலும், தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை நிறைவேற்றுவது மாநிலங்களுக்கு முழுமையாக பரவலாக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, தடுப்பூசி போடுவதற்கான சிக்கலான ஆன்லைன் பதிவு தேவைகளை நீக்குங்கள். தடுப்பூசிகளை அனைவரும் எளிதில் அணுகும்படியானதாக மாற்றுங்கள்" என்று ஒவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.


Also Read | ஆவின் பால் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது ஏன்?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR