பெரும்பாலான காய்கறிகளில் உருளைக்கிழங்கு சேர்க்கப்படுகிறது. காய்கறிகளைத் தவிர, உருளைக்கிழங்கு சிப்ஸ், பாப்பாட் மற்றும் பிரஞ்சு ஃப்ரைஸ் போன்றவையும்  உருளைக்கிழங்கு வைத்து தயாரிக்கப்படுகின்றன. அதேபோல் உருளைக்கிழங்கு ஜூஸ்ஸாக கூட தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. இது பல நோய்களுக்கு நன்மை பயக்கும். எனவே உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்
உருளைக்கிழங்கு ஜூஸ் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொழுப்பைக் குறைக்க உதவும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன. எனவே உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.


மேலும் படிக்க | உடல் எடை கன்னாபின்னானு ஏறுதா? இதுல கவனம் செலுத்தினா போதும்


ஒற்றைத் தலைவலிக்கு (மிகரைன்) நன்மை பயக்கும்
உருளைக்கிழங்கு ஜூஸ் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது மன அழுத்தம், சோர்வு மற்றும் மனச்சோர்வை நீக்க உதவுகிறது. அதேபோல் இந்த ஜூஸ் ஒற்றைத் தலைவலியை நீக்குவதில் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பதைத் தவிர, தலையில் தடவினாலும் தலைவலி பிரச்சனை நீங்கும்.


புண்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் புண்களை விரைவில் குணமாக உதவும். இதை குடிப்பதால் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இது புண்கள் வளர விடாமல் தடுக்கிறது. மேலும் உருளைக்கிழங்கு சாறு அல்சர் அபாயத்தை நீக்குகிறது. 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்களை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி தொற்று நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. அதேபோல் உருளைக்கிழங்கு சாறு சளி, காய்ச்சல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும்.


கல்லீரலை ஆரோக்கியமாக்க வைக்கும்
உருளைக்கிழங்கு சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. இது ஹெபடைடிஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | நாட்டு மருந்து..பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ