எடை இழப்புக்கான குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஏனெனில் உடல் பருமனாக இருப்பதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதனால் பல வித உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஜிம் என பல வழிகளில் எடையை குறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சிறிய பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தினால் போதும். அதேபோல் சில பழக்கங்களை நிறுத்திவிட்டாலும், எடை குறைப்பதில் அதிக கவனம் செலுத்த முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஃபிட்டாக இருக்க, இன்றே இந்த பழக்கங்களுக்கு பை சொல்லுங்கள்:
காலையில் பொரித்த உணவை உண்ண வேண்டாம்:
காலை உணவு என்பது மிக முக்கியமான உணவாகும். ஏனென்றால், காலை உணவில் எதைச் சாப்பிட்டாலும் அதன் பாதிப்பு நாள் முழுவதும் உடலில் இருக்கிறது. ஆகையால், காலை உணவில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். காலை உணவில், அவல், ஓட்ஸ், பழங்கள், சாலட் ஆகியவற்றை உட்கொண்டால் நல்லது என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சரியான அளவு தண்ணீர்
மக்கள் தண்ணீர் குறைவாக குடிப்பதால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற முடியாமல் போகிறது. அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். இது தவிர, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும்.
மேலும் படிக்க | நாட்டு மருந்து..பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன
உடற்பயிற்சி செய்ய வேண்டும்
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஏதாவது உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும். இதற்கு ஜிம்முக்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது இல்லை. வீட்டிலேயே எளிய உடற்பயிற்சிகளை செய்வது, நடைபயிற்சி, யோகா ஆகியவையும் பயன்தரும். இது தவிர, உணவு உண்ட பிறகு கண்டிப்பாக 15 நிமிடங்கள் நடக்கவும். இப்படி செய்வதால், உணவு எளிதில் ஜீரணமாகும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
இரவு உணவின் நேரம்:
தாமதமான இரவு உணவு உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகையால், அனைவரும் 10 மணிக்கு முன் இரவு உணவை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். இரவில் பசி எடுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால், வயிற்றை நிரப்பிக்கொள்ள தண்ணீர் குடிக்கலாம். ஆனால், கனமான உணவுகளை அப்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் பருமனால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் இருந்தால் இவ்வளவு ஆபத்தா? ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ