உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை இந்த 3 வழிகளில் சாப்பிட்டால், மெலிந்த உடல்வாகு கொண்டவர்களும் உடனடியாக எடை அதிகரிப்பார்கள்.
 
மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு உருளைக்கிழங்கு மிகவும் நன்மை பயக்கும். எடை அதிகரிக்காமல் இருப்பது தான் உங்கள் பிரச்சனை என்றால், இந்த வழிகளில் தொடர்ந்து உருளைக்கிழங்கை சாப்பிடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


உருளைக்கிழங்கும் உடல் எடையும் 


உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான காய்கறிகள் உருளைக்கிழங்குடன் கலந்து தயாரிக்கப்படுகின்றன. உருளைக்கிழங்கு, ஆண்டின் எல்லாப்  பருவத்திலும் உட்கொள்ளப்படுகிறது.


ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்கள் அல்லது எடை அதிகரிக்காதவர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. 


உருளைக்கிழங்கில் நார்ச்சத்து, துத்தநாகம், இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. உருளைக்கிழங்கில் கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் அமிலங்கள் போன்ற பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும்


இந்த சத்துக்கள் அனைத்தும் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்க உருளைக்கிழங்கை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதும் உணவுக் கலையைப் போல ஒரு எடை அதிகரிப்புக் கலையாகும்.


வறுத்த உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவதைவிட, வறுத்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும். குளிர்காலத்தில், நெருப்பில் சுட்ட உருளைக்கிழங்கை சாப்பிடுவார்கள், அதில் மேலும் சுவை கூட்ட, உப்பு அல்லது சட்னி சேர்க்கலாம்.



உடல் எடையை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உருளைக்கிழங்கை தினசரி உணவில் சேர்த்துக்கொளலாம். எந்த காய்கறியிலும் கூட்டு சேரக்கூடியது உருளைக் கிழங்கு.


எடை அதிகரிக்க உருளைக்கிழங்கை எப்படி சாப்பிடுவது?
உடல் எடையை அதிகரிக்க உருளைக்கிழங்கை எவ்வாறு உட்கொள்வது என்பது பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உருளைக்கிழங்கை உட்கொள்ளும் சில பொதுவான வழிகள் உள்ளன.


வேகவைத்த உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வேகவைப்பது உடல் எடையை அதிகரிக்க பெரிதும் உதவும். உருளைக் கிழங்கை வேகவைத்து அப்படியே சாப்பிட்டால் சுவையாக இல்லை என்றால், உப்பு அல்லது கருப்பு உப்பு தூவி சாப்பிடலாம்.


கொத்தமல்லி சட்னியுடன் கலந்து சுவையாக சாப்பிடலாம். காலை உணவாக உருளைக் கிழங்கு சாப்பிடுவது உடல் எடையை உடனடியாக அதிகரிக்கும்.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் ராகி மாவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR