புதுடெல்லி: இந்தியாவில் இன்று (ஜனவரி 10) முதல் பூஸ்டர் டோஸ் (Precaution Dose) தொடங்கப்பட்டுள்ளது. Precaution Dose முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு வழங்கப்படும். Precaution Dose ஐ பெற, கோ-வின் (Co-Win) ஸ்லாட்டை முன்பதிவு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Precaution Dose டோஸ்க்கான ஸ்லாட்டை பதிவு செய்யவும்
பூஸ்டர் டோஸ் (Precaution Dose) ஸ்லாட்டுக்கான முன்பதிவு ஜனவரி 8 முதல் Co-Win மூலம் தொடங்கப்பட்டது. சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், Co-Win இல் பூஸ்டர் டோஸிற்கான ஸ்லாட்டை முன்பதிவு செய்யலாம். கோ-வின் மீது பூஸ்டர் டோஸிற்கான ஸ்லாட்டை முன்பதிவு செய்வதற்கான நடைமுறை என்ன என்பதை பார்போம்.


ALSO READ | அதிவேகமாக பரவும் Omicron, பொதுவான அறிகுறிகள் என்னென்ன


Co-Win இல் மீது Precaution Dose ஸ்லாட்டை பதிவு செய்வதற்கான நடைமுறை-
- Co-Win இல் மொபைல் எண் மற்றும் OTP மூலம் பதிவு செய்யப்படும். பழைய மொபைல் எண்ணிலிருந்தே Precaution Dose ஸ்லாட்டைப் பதிவு செய்யவும்.
- Co-Win இல் பதிவு செய்யும் போது, ​​Precaution Dose இன் சரியான தேதியைப் பார்கவும். அதன் அடிப்படையில் ஸ்லாட் பதிவு செய்யப்படும்.
- பதிவு செய்யும் போது, ​​நீங்கள் எந்த பிரிவில் உள்ளீர்கள் - சுகாதாரப் பணியாளர், முன்னணி பணியாளர் அல்லது குடிமகனா என்பதை பார்கவும்.


தடுப்பூசி மையத்தின் சான்றிதழ்
பூஸ்டர் டோஸுக்கு முன்பதிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தடுப்பூசி டோஸுக்கு வாக்-இன் செய்வதற்கான ஏற்பாடும் உள்ளது. முன்னெச்சரிக்கை மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு, தடுப்பூசி மையத்திலிருந்தே சான்றிதழைப் பெறுவீர்கள். முழு தடுப்பூசி / முன்னெச்சரிக்கை டோஸ் அதில் எழுதப்பட்டிருக்கும்.


9 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். 


தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கும் Precaution Dose வழங்கப்படும்
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பணிபுரியச் செல்லும் அரசு ஊழியர்களும் முன்னணி ஊழியர்களாகக் கருதப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு Precaution Dose வழங்கப்படும்.


ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR