White Hair Problem: நரை முடி கருப்பாக மாற இதை ஃபாலோ பண்ணுங்க
Premature White Hair Home Remedies: உங்களுக்கு நரைத்த தலைமுடியை சரிசெய்ய வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். கீழே வெள்ளை முடியை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சில தசாப்தங்கள் பின்னோக்கிச் சென்றால், தலையில் வெள்ளை முடி தோன்றுவது முதுமை தொடங்கியதற்கான அறிகுறிகள் ஆகும். ஆனால் தற்போதைய காலகட்டத்தின் பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால், 25 வயதிலேயே முடி நரைக்க ஆரம்பமாகிவிடுகிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் இது மரபணு காரணங்களைக் கொண்டிருக்கலாம். அது எப்படியிருந்தாலும் சரி, இளம் வயதில் தலைமுடி நரைப்பதால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
சிறு வயதிலேயே நரை முடி
அந்தவகையில் இப்பிரச்சனையைத் தவிர்க்க, இளைஞர்கள் சில தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக வெள்ளை முடிக்கு வண்ணம் பூசத் தொடங்குவது, அவற்றை பிடுங்குவது போன்றவற்றை இதில் அடங்கும். எனவே இனி விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக, சமையலறையில் இருக்கும் பொருட்களின் மூலம் இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக்க முடியும். ஆம்., வெல்லம் மற்றும் வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வெள்ளை முடி இயற்கையாகவே கருப்பாக மாறும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
வெள்ளை முடி ஏன் ஏற்படுகிறது
பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.
வெல்லம் மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
* வெந்தய விதைகள் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் அதை வெல்லத்துடன் சாப்பிட்டால் அதன் பலன் இரட்டிப்பாகும்.
* வெந்தயத்தை அரைத்து பொடி செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெல்லத்துடன் சாப்பிடவும்.
* இந்த ரெசிபியை சில நாட்கள் பின்பற்றி வந்தால், முன்கூட்டிய முடி நரைப்பது நின்றுவிடுவது மட்டுமல்லாமல், மீதமுள்ள வெள்ளை முடியும் மீண்டும் கருமையாக மாறும்.
வெந்தய விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது
* வெந்தயம் மற்றும் வெல்லம் சாப்பிடுவதால் முடி உதிர்வு நீங்கி, முடி முன்பை விட வலுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
* வெந்தயத் தண்ணீரைத் தயாரிக்க, அதன் விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்த பிறகு குடிக்கவும்.
* வெந்தயத்தை கூந்தலில் தடவி கழுவினால், அதுவும் சிறந்த பலனைத் தரும்.
* வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, காலையில் பேஸ்ட் செய்து தலைமுடியில் தடவவும்.
* வெந்தயம் முடி உதிர்தல், நரை முடி மற்றும் யூரிக் அமில அளவுகளை (கௌட்) குறைக்க உதவுகிறது. அவை இரத்தத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமும் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்குவதன் மூலமும் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR