அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி இருந்தாலும் இங்கு பலரும் புற அழகை வைத்தே கணிக்கப்படுகிறார்கள். இதனால் தங்களது புற அழகை செம்மையாக வைத்துக்கொள்ள பலரும் பல வித முயற்சிகளில் இறங்கிவருகின்றனர். அதேசமயம் நமது அழகை பாதுகாக்கவும், பராமரிக்கவும் இயற்கையான முறையிலேயே வழிகள் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற அழகை பராமரிக்க இறந்த செல்களை நீக்குவது முக்கியமானதாகும். அப்படி நீக்குவதற்கு இயற்கையான பொருள்களே உதவுகின்றன. அவை பின்வருமாறு:


கூந்தல் அழகு:


ஆணுக்கோ, பெண்ணுக்கோ கூந்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். புற அழகில் கூந்தல் அழகு பெரும் பங்கு வகிக்கிறது. 


கூந்தலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிகள்:


தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தும்போது ‘கண்டிஷனிங்’ செய்வது முக்கியமானது. குறிப்பாக ‘முடி பிளவு’ உடையவர்கள் கண்டிஷனிங் செய்துவந்தால் அந்தப் பிரச்சினை நீங்கும். 


மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த ஜூஸை கண்டிப்பா குடிக்கணும்


வறண்ட கூந்தல் உடையவர்கள் ‘கிரீம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். சுருட்டை முடி கொண்டவர்கள் ‘ஜெல்’ வகை கண்டிஷனரை தேர்வு செய்யலாம்.


நேரான முடி கொண்டவர்கள் ‘கிரீம்’ அல்லது ‘போம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். இயற்கையான முறையில், சாதம், வடித்த கஞ்சி, மருதாணி, செம்பருத்தி போன்றவற்றையும் கூந்தலுக்கு பயன்படுத்தி அழகை காக்கலாம்.


நகங்கள் பராமரிப்பு:


அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல் உடலின் ஆரோக்கியமும், நிலையும் நகத்தில் தெரியும் என்ற கூற்று உண்டு. எனவே நகத்தை பராமரிப்பதும், பாதுகாப்பதும் முக்கியம் ஆகும்.


நகத்தை பாதுகாக்கவும், பராமரிக்க வழிகள்:


நகங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் தொற்று ஏற்படாது. 


மேலும் படிக்க | White Hair Problem: நரை முடி கருப்பாக மாற இதை ஃபாலோ பண்ணுங்க


வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு, எலுமிச்சம் பழச்சாறு போன்றவைகளை கலந்து, அதில் கைவிரல் நகங்களை சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.


அதேபோல் நகம் வெட்டுவதற்கு உகந்த நேரம் குளித்து முடித்த பிறகு ஆகும். அந்த சமயத்தில் நகங்களை வெட்டினால் வெட்டுவதற்கு எளிதாக இருக்கும்.


சரும பராமரிப்பு:


ஒரு மனிதனின் அழகில் சருமத்திற்கும் அதிக பங்கு உண்டு. அதனை பராமரிப்பதற்கு, பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் பலர் கெமிக்கலை தேடி செல்கின்றனர். அப்படி கெமிக்கல் கலந்த பொருள்களை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.


சரும பராமரிப்பிற்கான இயற்கை வழிகள்:


வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்டக்கொழுப்பு கரைந்து சருமம் பொலிவாகும். ரசாயனப் பொருட்கள் நிறைந்த கிரீம்கள், முகப் பூச்சுகளை அதிகம் பயன்படுத்தினால் சருமம் பாதிக்கப்படும். சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR