நரை முடி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்போ இந்த யோகாசனம் போதும்
Yoga To Prevent White Hair: இந்த யோகாசனங்களை செய்வதன் மூலம், முடி முன்கூட்டியே நரைக்கும் பிரச்சனை ஏற்படாது. குறிப்பாக இளைஞர்கள் இந்த யோகாவை செய்யலாம்.
முடி பராமரிப்பு குறிப்புகள்: முடி முன்கூட்டியே நரைப்பது கவலைக்குரிய விஷயமாகும். மாறிவரும் வாழ்க்கை முறை, பிஸியான வாழ்க்கை, தவறான உணவுப்பழக்கம் மற்றும் மரபியல் போன்றவையும் நரை முடிக்கு காரணங்களாகின்றன. இருப்பினும், தலையில் வெள்ளை முடியுடன் இருப்பவர் இந்த யோகாசனங்களை செய்வதால் கருப்பு முடி வராது, ஆனால் இந்த யோகாசனங்களை செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு இளம் வயதில் ஏற்படும் வெள்ளை முடி பிரச்சனையை தவிர்க்கலாம். யோகா பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் இதை மனதில் வைத்து, இந்த யோகாசனங்களை முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நீண்ட காலத்திற்கு முடியை கருப்பாக வைத்திருக்கவும் முடியும்.
முடி நரைப்பதைத் தடுக்க யோகா | Yoga to Prevent White Hair
ஹலாசனம் - Halasana
* ஹலாசனம் செய்ய, முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்த படி, இரண்டு கால்களையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும்.
* இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வைத்திருக்க வேண்டும்.
* பின் கால்களை மெதுவாக தலைக்கு மேல் உயர்த்து, முதுகை வளைத்து பாதங்களை தலைக்கு பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முயற்சிக்க வேண்டும்.
* இந்நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிட வேண்டும்.
* பின்பு மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இந்த ஆசனத்தை 3-5 முறை செய்யலாம்.
மேலும் படிக்க | ரசாயன பயன்பாடு பெண்களுக்கு மட்டுமே ஏன் கேன்சரை அதிகரிக்கிறது? அதிர்ச்சி தரும் ஆய்வு
திரிகோணாசனம் - Trikonasana
* முதலில் இரண்டு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
* பின் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி, தோள்பட்டைக்கு இணையாக நேராக நீட்டி கொள்ள வேண்டும்.
* பின்பு மூச்சை வெளியே விட்டுக் கொண்டு இடது பக்கம் வளைந்து இடக் கையால் இடது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும். இதில் முகமானது மேலே உள்ள வலது கையின் நுனிவிரலைப் பார்க்க வேண்டும்.
* பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* பின்னர் மூச்சை வெளி விட்டுக் கொண்டு வலது பக்கம் வளைந்து வலது கையால் வலது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும். முகமானது மேலே உள்ள இடது கையின் நுனிவிரலைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
* பின் மெதுவாக மூக்கை உள்ளிழுத்துக் கொண்டே நிமிட வேண்டும்.
* இப்படி 3-6 முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
புஜங்காசனம் - Bhujangasana
* இந்த யோகாசனம் கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்க வேண்டும்.
* பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இரண்டு புறமும் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியை மேலே உயர்த்தி, பின்னோக்கி வளைய வேண்டும்.
* 15-20 நொடிகளுக்கு பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.
* இப்படி 5 முறை செய்ய வேண்டும்.
மச்சாசனம் - Matsyasana
* மீன் போஸ் அல்லது மச்சாசனம் செய்ய, நேராக தரையில் படுத்துக் கொள்ளுங்கள்.
* இப்போது உங்கள் உள்ளங்கைகளை உங்கள் பிட்டத்தின் கீழே வைக்கவும்.
* இப்போது உங்கள் மார்பையும் தலையையும் மேலே உயர்த்தி, உங்களுக்குப் பின்னால் உள்ள சுவரைப் பார்க்க முயற்சிக்கவும்.
* இந்த நிலையை 30 விநாடிகள் வைத்திருக்க முயற்சிக்கவும்.
* ஆசனத்தை முடித்த பிறகு, முதலில் உங்கள் தலையை நேராக்கவும், பின்னர் உடலின் மற்ற பகுதிகளை நேராக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா... உங்கள் எலும்புகள் ரொம்ப பலவீனமாக இருக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ