உடல் எடை குறைக்க யோகாசனங்கள்: தற்போது பலர் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றத் தொடங்கியுள்ளனர். யோகா உடலை வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க செய்யப்படுகிறது. அதே சமயம் உடல் எடையை (Weight Loss) குறைப்பதற்காகவும் யோகா செய்யப்படுகிறது, இதனால் உடல் முழுவதுமாக ஃபிட்டாக இருக்கும். அந்த வகையில் தொப்பை கொழுப்பைக் (Belly Fat) குறைப்பதில் அற்புதமான விளைவைக் காட்டும் அத்தகைய யோகா ஆசனம் பற்றி இங்கே நாம் காணப் போகிறோம். இந்த யோகாசனம் திரிகோணாசனம் (Trikonasana) ஆகும். உங்கள் வயிறு நீண்டு கொண்டே இருந்தால், உங்கள் உடல் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், நீங்கள் திரிகோணாசனத்தை செய்யலாம்.
தொப்பையை குறைக்க திரிகோணாசனம் | Trikonasana To Lose Belly Fat
திரிகோணாசனம் செய்வதற்கு முன், உங்கள் வயிறு காலியாகவும் சுத்தமாகவும் இருப்பது முக்கியம். உணவு உண்பதற்கும் திரிகோணாசனத்திற்கும் இடையில் குறைந்தது 4 முதல் 6 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். பொதுவாக, காலை நேரம் திரிகோனாசனம் செய்வது நல்லது. திரிகோணாசனம் மாலையிலும் செய்யலாம்.
மேலும் படிக்க | இந்த பானங்களை காலையில் குடிச்சா போதும்: வேகமா எடையை குறைக்கலாம்
திரிகோணாசனம் செய்வது எப்படி?
யோகாசனங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான உடற்பயிற்சி ஆகும். இந்த யோகாசனங்கள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. இந்த யோகாசனங்களில் ஒன்று தான் திரிகோணாசனம். இந்த ஆசனம் ஒருவரது உடல் மற்றும் மன உறுதியை கொண்டு வருகின்றன. மேலும் இது முக்கிய தசைகள் மற்றும் கால்களை வலுவாக்க உதவுகின்றன.
முதலில் இரண்டு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பின்னர் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி, தோள்பட்டைக்கு இணையாக நேராக நீட்டி கொள்ள வேண்டும். அதன் பிறகு மூச்சை வெளியே விட்டுக் கொண்டு இடது பக்கம் வளைந்து இடக் கையால் இடது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும்.
இந்நிலையில் சில நொடிகள் இருக்க வேண்டும். இந்நிலையில் முகமானது மேலே உள்ள வலது கையின் நுனிவிரலைப் பார்க்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். பின்னர் மூச்சை வெளி விட்டுக் கொண்டு வலது பக்கம் வளைந்து வலது கையால் வலது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும். முகமானது மேலே உள்ள இடது கையின் நுனிவிரலைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். சில நொடிகளுக்கு. பின் மெதுவாக மூக்கை உள்ளிழுத்துக் கொண்டே நிமிட வேண்டும். இப்படி 3-6 முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
திரிகோணாசனம் நன்மைகள்
திரிகோணாசனம் தொப்பையை குறைக்க மட்டும் செய்யப்படுவதில்லை, இது தவிர திரிகோணாசனம் செய்வதால் பல நன்மைகள் உள்ளன. திரிகோணாசனம் செய்வதால் முதுகு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இதனால் உடல் முழுவதும் கொழுப்பு எரிகிறது. இந்த யோகா செய்வதால் செரிமானமும் மேம்படும். இந்த யோகாசனம் இடுப்பு மூட்டுகளுக்கும் நன்மை பயக்கும். இது தவிர, சகிப்புத்தன்மை, சமநிலை மற்றும் ஆற்றலைப் பராமரிக்கவும் செய்யலாம்.
யாரெல்லாம் திரிகோணாசனம் செய்யக்கூடாது?
ஸ்லிப் டிஸ்க்குகள் அல்லது கடுமையான முதுகு வலியை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனம் செய்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தத்தில் 4 வகை: அதனை எவ்வாறு தடுக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ