Research on Protein: புரதச்சத்து சப்ளிமெண்ட் பெண்களுக்கு நல்லது, ஆண்களுக்கு தேவையில்லை!
கார்போஹைட்ரே இல்லாமல் பயிற்சிகள் செய்யும் போது கொடுக்கப்படும் புரதச் சத்து சப்ளிமெண்ட் பெண்களுக்கு வேலை செய்கின்றன, ஆனால் ஆண்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
கார்போஹைட்ரே இல்லாமல் பயிற்சிகள் செய்யும் போது கொடுக்கப்படும் புரதச் சத்து சப்ளிமெண்ட் பெண்களுக்கு வேலை செய்கின்றன, ஆனால் ஆண்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
புதிய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின்படி, கார்போஹைட்ரேட் உடலுக்கு கிடைக்காதபோது, புரதச்சத்து பெண்களின் உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் ஆண்களின் உடலில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படுவதில்லை. மாறாக அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, வெறும் தண்ணீரை குடிப்பதுடன் ஒப்பிடும்போது, புரதச்சத்து அவர்களுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த வாரம் நடைபெறவிருக்கும் உடலியல் சங்கத்தின் (The Physiological Society) வருடாந்திர மாநாட்டில், உடலியல் 2021 நிகழ்ச்சியின் ஒரு விளக்கக்காட்சியில் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்படும். விளையாட்டு வீரர்களுக்கான பெரும்பாலான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் (nutrition guidelines) ஆண்களிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை.
Also Read | இந்த 5 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்!
தஞ்சா ஓஸ்டுய்ஸ் (Tanja Oosthuyse) என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு, விளையாட்டு வீரர்களுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் ஒரு பாலரை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது, ஏனென்றால் ஆண்களில் ஊட்டச்சத்து ஆராய்ச்சி முடிவுகள் எப்போதும் பெண்களுக்கு பொருந்தாது. இரு பாலரின் உடல்கூறுகளும் பலவிதங்களில் மாறுபட்டவை ஆகும்.
உடற்பயிற்சி செய்யும்போது, புரதச் சத்துகளை தனிப்பட்ட முறையில் கொடுப்பது பெண்களுக்கு உதவினாலும், ஆண்களுக்கு அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தியது.
சாதாரண நீரைக் குடிக்கும்போது இருந்ததை விட புரதச்சத்துக்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட ஆண்களுக்கு உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்தது. இந்த ஆராய்ச்சி, கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளாமல் உடற்பயிற்சி செய்யும்போது, பெண்கள் புரதச் சத்துக்களை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. இது அவர்களின் உடல் சக்தியையும், உத்வேகத்தையும் அதிகரிக்கும்.
Also Read | தேன்: நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
கார்போஹைட்ரேட் உடலில் இல்லாத காலைவேளையில், பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் என நீண்ட காலத்திற்கு புரத ஹைட்ரோலைசேட் (protein hydrolysate) சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது நன்மை பயக்குமா என்பதை ஆய்வுகள் தான் தீர்மானிக்க வேண்டும்.
தற்போதைய ஆய்வில், ஆய்வாளர்கள் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கட்டத்தை (menstrual phase) கருத்தில் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாதவிடாயின் போதும் பெண்கள், புரத ஹைட்ரோலைசேட் உட்கொண்டு, தீவிரமாக உடற்பயிற்சி செய்வது தொடர்பாக தீர்மானிக்க மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
"எங்கள் ஆய்வின் கண்டுபிடிப்புகளின் பயன்பாடு, பயிற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இரவு முழுவதும் வெறும் வயிர்றுடன் இருந்த பிறகு, காலையில் உடற்பயிற்சி செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்சி இது. ஒரே விதமான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்றதாக இருக்காது.
இரு பாலருக்கும் இருக்கும் சாத்தியமான வேறுபாடுகளை நாம் குறிப்பிட வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்து ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை வெளியிட்டால், அது பெண் விளையாட்டு வீராங்கனைகளின் பயிற்சிக்கு துணைபுரியும். விளையாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று ஆராய்சியின் முதன்மை ஆய்வாளர் தன்ஜா ஓஸ்துய்ஸ் கூறுகிறார்.
Also Read | Health Tips: தாம்பத்திய வாழ்வை மேம்படுத்தும் சிவப்பு முள்ளங்கி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR