Uric Acid Alert: யூரிக் அமிலம் அதிகரித்தால், கீல்வாதம் நோய் ஏற்படும். கீல்வாதம் பாதிக்கத் தொடங்கும்போது, மூட்டுகளில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படும். கீல்வாத நோயின் அடுத்த அறிகுறி மூட்டுக்கள் சிவந்துபோவது, வீக்கம், கடுமையான வலி என பல அறிகுறிகளைக் காட்டும். மூட்டுகளைச் சுற்றி யூரிக் அமிலம் குவிவதால் ஏற்படும் இந்த உடல்நலக் கோளாறு, யூரிக் அமிலம் எலும்பு மூட்டுக்களில் படிவதால் உருவாக்குகிறது. அந்த சமயத்தில் மூட்டுக்களில் எது பட்டாலும் வலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, யூரிக் அமில பாதிப்பு ஏற்பட்டவர்களின் சிறுநீர் ஒரு விசித்திரமான வாசனையுடன் இருக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூரிக் அமிலம் என்றால் என்ன?


யூரிக் அமிலத்தை உருவாக்கும் உணவுகளை கட்டுப்படுத்துவது அனைவருக்கும் நல்லது என மருத்துவர்கள் சொல்கின்றனர். உண்மையில், அசைவ உணவுகள் அதிக யூரிக் ஆசிட் உருவாவதை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. யூரிக் அமிலம் என்றால் என்ன? நமது ரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். பியூரின் எனப்படும் ரசாயனங்களை உடல் வெளியிடும் போது உற்பத்தியாகும் அமிலம்.


யூரிக் அமிலம் சுரப்பு


இறைச்சியை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் சுரப்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. யூரிக் அமிலம் என்பது கல்லீரலில் சுரக்கப்பட்டு சிறுநீரகங்களுக்கு அனுப்பப்படும் கழிவுப்பொருள், இது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. பொதுவாக யூரிக் அமிலம் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.


மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்த சூப்பர் டெக்னிக்! அமில சுரப்பை கட்டுப்படுத்தும் பாகற்காய்


யூரிக் அமிலம் அதிகமாக பொதுவான காரணங்கள்


மோசமான வாழ்க்கை முறை, சிறுநீரகம் அல்லது கல்லீரலில் பிரச்சனை, ப்யூரின் அதிகமுள்ள உணவுகளை உண்பது என பல காரணங்கள் ப்யூரின் அளவு உடலில் அதிகரிக்கக் காரணம் ஆகிறது.   


அதிக புரதம் மற்றும் பியூரின் அதிக அளவில் உள்ள உணவுகளை உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். சிவப்பு இறைச்சியில் யூரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் பியூரின்கள் அதிகம் உள்ளன. அதேபோல, அசைவ உணவுகளில் புரதச்சத்தும் அதிகம் உள்ளது. இதனால் தான், அசைவ உணவு உண்பவர்கள் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுவது அதிக அளவில் உள்ளது.


கீல்வாதத்தை உருவாக்கும் யூரிக் அமில சுரப்பை சரிவிகித உணவின் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம். இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்காவிட்டாலும், அதை அளவுடன் உண்பது நல்லது.  


மேலும் படிக்க | கீல்வாதம், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சுலபமான வழி! ஃபாலோ பண்ணா ஆரோக்கியம் உறுதி


யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் உணவுகள்
பீர் மற்றும் தானிய மதுபானங்கள் 
சிவப்பு இறைச்சி, ஆடு மற்றும் பன்றி இறைச்சி
கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்பு இறைச்சிகள் 
கணையம் போன்ற சுரப்பி இறைச்சிகள் 
கடல் உணவு, குறிப்பாக இறால், இரால், மட்டி, நெத்திலி மற்றும் மத்தி போன்ற மீன்கள்
சோடா, பழச்சாறுகள், தானியங்கள், ஐஸ்கிரீம், மிட்டாய், துரித உணவுகள்



யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உணவுமுறையில் மாற்றங்கள் 


உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் கீல்வாத பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். பியூரின்கள் அதிகம் உள்ள உணவுகள் உங்கள் இரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகரித்து கீல்வாதத்தை தூண்டும் என்பதால், கீல்வாத நோய் அறிகுறிகள் இருப்பவர்களும், பாதிப்பு உள்ளவர்களும் அசைவ உணவுகளை தவிர்க்கலாம்.


குறிப்பிட்ட சில கடல் உணவுகள்
ஈரல் போன்றா உறுப்பு இறைச்சிகள்
சைவ உணவாக இருந்தாலும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்
இனிப்பு பானங்களை தவிர்க்கவும்


(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | யூரிக் ஆசிட் கட்டுப்படுத்தும் அருமையான கீரை! ப்யூரினை தூளாக்கும் கடுகுக்கீரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ