Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது கடினமான மற்றும் சவாலான பணியாக மாறியுள்ளது. இதில், சரியான உடற்பயிற்சியுடன், நீங்கள் என்ன, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனுடன், தினமும் ஒரே மாதிரியான சலிப்பான உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, நீங்கள் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். நமது உணவில் சரியான அளவு நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்ப்பதால், நமது எடையை சரியாக வைத்திருக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேர்க்கடலையின் நன்மைகள் (Benefits of Peanuts)


வேர்க்கடலை சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கின்றது. மேலும் இவை உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தையும் இவை மேம்படுத்துகின்றன. இதில் புரதம், நல்ல கொழுப்பு, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற பல அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால், வேர்க்கடலை வலுவான தசைகள் மற்றும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


இது தவிர, வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து அதிக நேரம் வயிற்றை நிரம்பவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.


குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறன. 


எடை இழப்பு


வேர்க்கடலையில் அதிக கலோரி உள்ளது. இதன் காரணமாக, வேர்க்கடலையால் எடை அதிகரிக்காமல் எடை இழப்பில் (Weight Loss) அதிக நன்மை கிடைக்கிறது. வேர்க்கலை அதிக ஆற்றல் கொண்டது என்பதால், இவை நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இருக்க வைக்கின்றன. கூடுதலாக, வேர்க்கடலையை சிற்றுண்டியாக சாப்பிடுவது முழுமையான உணர்வை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது எடை மேலாண்மைக்கு உதவும்.


ஆரோக்கியமான இதயம்


கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இதயம் தொடர்பான வீக்கத்தைக் குறைப்பதன் மூலம், வேர்க்கடலை கரோனரி இதய நோயைத் தடுக்கும்.


மேலும் படிக்க | உடல் கொழுப்பை எரிக்க... சர்க்கரைவள்ளிக் கிழங்கை ‘இப்படி’ சாப்பிடுங்க!


புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது


வேர்க்கடலை மற்றும் பிற அனைத்து பருப்புகளிலும் பினோலிக் அமிலம், ரெஸ்வெராட்ரோல் மற்றும் ஐசோஃப்ளேவோன்கள் போன்ற ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. இவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.


நீரிழிவு ஆபத்து குறைக்கப்படுகிறது


இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் குறைந்த கிளைசெமிக் உணவான வேர்க்கடலை பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.


ஆண்டிஆக்செடெண்ட் பண்புகள்


வேர்க்கடலை (Peanuts) தோல்களில் ஏராளமான ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. ஆனால் அவற்றை பச்சையாக சாப்பிடுவதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. தாவரத்தின் விதைகளில் இருக்கும் இது கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைத் தடுக்க உதவும். இதில் ரெஸ்வெராட்ரோல், கூமரிக் அமிலம், பைட்டோஸ்டெரால்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் பைடிக் அமிலம் ஆகியவை உள்ளன. 


நீண்ட ஆயுள்


வேர்க்கடலை உட்பட - தினமும் கொட்டைகள் சாப்பிடுவது ஆயுளை நீட்டிக்கும் என்றும் உடல் விரைவில் வலுவிழந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சாத்தியத்தை தடுக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குளிர்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ