Radish Benefits Tamil | குளிர்காலத்தில் செரிமான பிரச்சனைகள் அதிகமாகும். இந்த நேரத்தில் மக்கள் தண்ணீர் போதுமான அளவு குடிக்காமல் இருப்பது, அதிக கலோரி உணவுகளை உட்கொள்வதால், மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் அதிகரிக்கும். மலச்சிக்கலுக்கு நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குடல் பிரச்சினைகள் மற்றும் பைல்ஸ் போன்ற பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. மலச்சிக்கலைப் போக்க, அதிக தண்ணீர் உட்கொள்வது மற்றும் உணவில் நார்ச்சத்து நிறைந்த சில உணவுகளை சாப்பிடுவதும் அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர்காலத்தில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக இருந்தால், மலச்சிக்கல் நிச்சயம் வரும். இந்த பிரச்சனையுடன் வாழ்வது கடினம். இருப்பினும் இந்த பிரச்சனைக்கு முள்ளங்கி மூலம் தீர்வு காணலாம். முள்ளங்கி, அதன் இலைகள் அளவற்றை ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் முள்ளங்களி இலைகளை யாரும் சாப்பிடுவதில்லை.  ஆனால் முள்ளங்கி இலைகள் இந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கும். 


ஆயுர்வேத நிபுணர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா கூறுகையில், முள்ளங்கியை அதன் இலைகளுடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளை சமாளிக்கலாம். முள்ளங்கி மற்றும் அதன் இலைகள் நாள்பட்ட அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சஞ்சீவி. முள்ளங்கியை கல் உப்புடன் சேர்த்து உட்கொண்டால், செரிமானம் முழுமையாக சீராக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த உப்பு, வாயு, அமிலத்தன்மையை நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும். 


மேலும் படிக்க | குளிர் காலத்தில் காலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு பிரச்சனைகளே வராது..!


கல் உப்புடன் முள்ளங்கியை எப்படி உட்கொள்வது?


உங்களுக்கு வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை மற்றும் வயிற்றில் தொந்தரவு இருந்தால், இரவில் நான்கு முள்ளங்கியை வெட்டி அதில் 3-4 கிராம் கல் உப்பைக் கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு இரவு முழுவதும் வைத்துவிடவும். காலையில் எழுந்தவுடன், முள்ளங்கியில் இருந்து நிறைய தண்ணீர் வெளியேறும். இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்துவிட்டு முள்ளங்கியை சாப்பிடுங்கள். இதனை உட்கொள்வதால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகி மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். 


முள்ளங்கி ஆரோக்கிய நன்மைகள் 


முள்ளங்கியை சாப்பிடுவதால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முள்ளங்கி காய்கறியை அதன் இலைகளுடன் சாப்பிடுங்கள். முள்ளங்கி சாறும் உட்கொள்ளலாம். ஆயுர்வேதத்தின் படி, முள்ளங்கி குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது, மேலும் இது வாத மற்றும் கப தோஷத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. முள்ளங்கியை உட்கொள்வதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சுத்தமாகும். முள்ளங்கியை உட்கொள்வதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் முள்ளங்கியை உட்கொள்ள வேண்டும்.


முள்ளங்கியை எப்போது உட்கொள்ள வேண்டும்?


நீங்கள் முள்ளங்கியில் இருந்து முழு பலன்களைப் பெற விரும்பினால், காலை மற்றும் மதியம் முள்ளங்கியை உட்கொள்ளுங்கள். இரவு உணவில் முள்ளங்கி காய்கறிகளை உட்கொள்ளக்கூடாது. முள்ளங்கி சீக்கிரம் செரிக்க வேண்டுமானால், முள்ளங்கி சாப்பிட்ட பிறகு ஒரு சிறிய துண்டு இஞ்சியை சாப்பிடுங்கள். முள்ளங்கி சாப்பிட்ட பிறகு இஞ்சி சாப்பிட்டால், முள்ளங்கி செரிமானமாகிவிடும். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | முதுகு வலி, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.... ஆண்களில் காணப்படும் 6 முக்கிய புற்றுநோய் அறிகுறிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ