Weight Loss Tips: மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், எடை அதிகரிப்பு மக்களை பாடாய் படுத்துகிறது. எடையை குறைப்பது மக்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. எடை அதிகரிப்பது ஆளுமையை பாதிப்பது மட்டுமின்றி, இது நீண்ட நாட்களுக்கு நீடித்தால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவுகளுடன் சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம். பலர் எடையை குறைக்க (Weight Loss) ஜிம் செல்கிறார்கள், உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். ஆனால், அனைவருக்கும் இதில் தேவையான பலன் கிடைப்பதில்லை. மேலும் இவற்றுக்கான நேரமும் அனைவரிடமும் இருப்பதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், சரியான உணவு, போதுமான உடல் செயல்பாட்டுடன் சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றினால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். இது தவிர, இந்த வீட்டு வைத்தியத்தின் நல்ல விஷயம் என்னவென்றால், அவை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்கவும் எடையைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


தேன் மற்றும் எலுமிச்சை நீர்


எலுமிச்சை (Lemon) மற்றும் தேன் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன. இதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை நீர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் உட்கொள்ள வேண்டும். இதை தினமும் உட்கொள்வது எடை இழப்புக்கு உதவுகிறது. எலுமிச்சை மற்றும் தேன் செரிமான அமைப்பில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகின்றன.


சீரக தண்ணீர்


சீரக (Cumin Seeds) நீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதற்கு சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் வயிற்று ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நல்லது.


ஓமம்


ஓமம் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இது ஜலதோஷத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதன் நீர் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது அஜீரண கோளாறுகளையும் சரி செய்கிறது. ஓம நீர் செய்ய, ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் அப்படியே இருக்க வைக்கவும். மறுநாள் காலையில் இதை கொதிக்க வைத்து வடிகட்டி, பின் உட்கொள்ளவும்.


மேலும் படிக்க | காய்ச்சல் இருந்தால் எந்த பழங்களை சாப்பிடலாம்? நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த கனிகள்


தயிர் பச்சடி


ராய்தா என்றும் அழைக்கப்படும் தயிர் பச்சடி உணவுக்கு சுவையை சேர்ப்பதோடு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இது தவிர, ராய்தாவில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. அவை குடலின் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியம். பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி ராய்தா செய்யலாம்.


முளைகள் காய்கறி சாலட்


முளைகள் (Sprouts) மற்றும் காய்கறி சாலட் ஒன்றாக எடை இழப்புக்கு ஒரு சிறந்த கலவையாகும். இதில் புரதங்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உங்கள் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருப்பதைத் தவிர, வறுத்த பொருட்களைத் தேவையில்லாமல் உட்கொள்வதையும் தவிர்க்கும். இது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சிறுநீரகக் கல் பிரச்சனையா? யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் இதுக்கெல்லாம் நோ சொல்லுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ