எடை இழப்பு குறிப்புகள்: உடல் பருமன் என்பது இந்நாட்களில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல் பருமன் அல்லது அதிகரித்த எடை ஒரு நபரின் முழு ஆளுமையையும் கெடுத்துவிடுகிறது. இதனால், பலரது தன்னம்பிக்கையும் நிலைகுலைந்து விடுகிறது. இது மட்டுமல்லாமல் பல வித உடல் எடை அதிகரிப்பதால் பல வித நோய்களும் உடலை ஆட்கொள்ளக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை இழப்புக்கு நெய்


நல்ல தரமான நெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனினும் நெய்யை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுத்தமான நெய் கொண்டு பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக, பெரும்பாலான மக்கள் ரொட்டி, இனிப்பு வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் நெய்யைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக அதிகமாக நெய் உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மையல்ல. 


சுத்தமான நெய்யை உட்கொள்வதால் உடல் எடையை குறைக்கலாம் என்று கூறப்படுகின்றது. நெய்யை சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், அதுவும் எடையைக் குறைக்க உதவும் என்று பல சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் நெய்யை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையெனில், அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். 


எடையை விரைவாகக் குறைக்க எவ்வளவு நெய்யை நாம் உட்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


உடல் எடையை குறைக்க நெய்யை இப்படி சாப்பிடுங்கள்: 


சமையலில் நெய்யை இப்படி பயன்படுத்தலாம்:


சமையலில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தும் நபர்கள், அதற்கு பதிலாக நெய்யைப் பயன்படுத்தலாம். நெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.


மேலும் படிக்க | டீ குடிச்சா இவ்வளவு நல்லதா? மன அழுத்தத்தை குறைக்கும் எலக்காய் தேநீர்


பாலுடன் நெய்


உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும், பாலில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


காபியுடன் நெய்


இதை கேட்பதற்கு சற்று விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் காபியில் நெய் சேர்த்து குடிக்கலாம். இது பசியை விரைவாகக் குறைக்கும். மேலும் இது வயிற்றில் நிரம்பிய உணர்வை அளிக்குன்றது. இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


பானங்களுடன் நெய்


உடல் எடையை குறைக்க நெய்யை எனர்ஜி பானத்துடன் சேர்த்து சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு கரைவதிலும் செரிமானம் மேம்படுவதிலும் உதவி கிடைக்கும். 


பயத்தம் பருப்பு நீரில் நெய் கலந்து குடிக்கவும்


பயத்தம் பருப்பு நீர் விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. பயத்தம் பருப்பு நீரில் நெய்யை கலந்து பின்னர் அதை குடிக்கவும். இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பயத்தம் பருப்பு நீர் வயிற்றை சுத்தம் செய்து மலம் மற்றும் சிறுநீருடன் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் வெளியேற்றுகிறது. இது தவிர, இது குடல் இயக்கத்தையும் எளிதாக்குகிறது. இது வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வாரத்திற்கு இரண்டு முறை வெண்டைக்காய் சாப்பிட வேண்டுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ