குக்கரில் வைத்த சாப்பாட்டை சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?
நம்மில் பலர், குக்கரில் வேகவைத்த அரிசியை சாப்பிடுவோம். இதை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கேடு வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏன் தெரியுமா?
இந்திய உணவு பட்டியலில், மக்கள் பலரால் அதிகம் சாப்பிடப்படும் உணவாக இருப்பது அரிசியால் சமைத்த உணவுதான். அம்மி-குழவிக்கு பதிலாக மிக்ஸி, மாவரைக்கும் ஆட்டுக்கல்லுக்கு பதிலாக கிரைண்டர் என அனைத்தும் நம் வீட்டு சமையல் அறையில் மாடர்ன் ஆகிவிட்ட பிறகு, நாமும் சாதம் வடிக்கும் பழைய முறையை மறந்து, இப்போது குக்கரில் சாதம் வைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டோம். இந்த அவசர உலகில் அப்படி சாதத்தை வடிப்பதற்கு நேரமும், எரிவாயுவும் அதிகம் பிடிப்பதால் பலர் குக்கரில் செய்த அரிசி சாதத்தை சாப்பிடுகின்றனர். ஆனால், இதை சாப்பிடலாமா? இதனால் உடலுக்கு நல்லதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
குக்கர் சாதம் நல்லதா? கெட்டதா?
குக்கரில் செய்த அரிசி சாதத்தை பற்றி பேசும் மருத்துவர்கள், நாம் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக குக்கரில் சமைப்பதால், உடலுக்கு ஒரு பயணும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். இதற்கு காரணம், அரிசியில் ஸ்டார்ச் என்ற வகை உணவு பொருள் அதிகமாக இருக்குமாம். குக்கரில் அரிசியை சமைத்தால், இந்த ஸ்டார்ச், வெளியேறாமல் அப்படியே தங்கி விடும் என கூறப்படுகிறது. இதனால், குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிடுகையில் அந்த ஸ்டார்ச் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் தங்கிவிடும். இது, உடல் பருமனுக்கு பல சமயங்களில் காரணமாக அமையலாம்.
இன்றைய நவீன உலகில், அரசி சாதத்தை செய்வதற்கு குக்கர் மட்டுமல்ல இதற்கென்று தனியாக ப்ரெஷர் குக்கர், எலக்ட்ரானிக் குக்கர் என பல்வேறு வகை சாதனங்கள் வந்து விட்டன. நாம், நேரத்தை செலவு செய்ய கூடாது என்று இதில் சமைப்பதால், பல சமயங்களில் ஆபத்தில் கொண்டு விட்டுவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் படிக்க | கோடையில்... சுகர் லெவலை குறைக்க உதவும் சூப்பர் காய்கறிகள் இவை தான்..!!
அரிசி சாதத்தை ஏன் வடித்து சாப்பிட வேண்டும்?
பல ஆண்டுகளாக நம் ஊரில் சாதத்தை வடித்துதான் சாப்பிடுகின்றனர். உலை போட்டு, அது கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு, பின்னர் அரிசி வெந்து விட்டதா என்பதை பார்த்துதான் வடிப்பர். இப்படி செய்வதால், பல சமயங்களில் எதிர்பாராத வகையில் கையில், சூடான நீர் ஊற்றிக்கொள்வது, வெந்துபோன சாதம் கொஞ்சம் வடித்த நீரில் கொட்டி விடுவது போன்ற விபத்துகள் நிகழலாம். இதை தவிர்ப்பதற்காகவும் பலர் குக்கரில் அரிசியை வேக வைக்கின்றனர். ஆனால், மேற்கூறியது போல அரிசி உணவில் தங்கியுள்ள ஸ்டார்ச், வடித்த சாதத்தில் குறைவான அளவு இருக்கும். இதனால், உடலில் கார்போஹைட்ரேட்டின் ஏற்றமும் குறைவாகவே நடைபெறும் என கூறப்படுகிறது. எனவே, மருத்துவர்கள் பலர் குக்கரில் சாதம் வடிப்பதற்கு பதிலாக, வடித்த சாதத்தை சாப்பிடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு குக்கரில் வடித்த சாதத்தை கொடுக்கலாமா?
சிறு குழந்தைகளுக்கு சாப்பிட ஏதேனும் கொடுக்கையில் ‘இது கல்லை திண்ணாலும் செரிக்கிர வயசு..எதை வேணாலும் கொடுக்கலாம்’ என சில பெற்றோர்கள் கூறுவதுண்டு. ஆனால், இது குறித்து பேசும் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு குக்கரில் வடித்த சாதத்தை கொடுப்பது நல்லதல்ல என்று கூறுகின்றனர். முன்பு போல அல்லாமல் குழந்தைகள் தற்போது வெளியில் எங்கும் சென்று விளையாடுவதில்லை என்றும், அவர்களின் உடற்திறன் குறைவாக இருப்பதால், குக்கரில் வடித்த சாதத்தை கொடுக்கையில் அது அவ்வளவு எளிதல் ஜீரணமாகாது என்றும் தெரிவிக்கின்றனர். இது, அவர்கள் உடல் எடை ஏறுவதற்கும் காரணமாக அமையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை அதிரடியாய் குறைக்க இந்தப் பழங்களை சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ