2 முறை பல் துலக்கியும் வாய் துர்நாற்றம் அடிக்கிறதா? காரணம் இதுதான்!
பலருக்கு, எத்தனை முறை பல் துலக்கினாலும் வாயில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன? இங்கு பார்ப்பாேம்.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது எந்த அளவுக்கு முக்கியமான விஷயமோ அதைவிட, நம் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வது பெரிய விஷயமாகும். நேர்காணலுக்கு செல்கையில், முக்கியமான நபரை பார்க்க செல்கையில் நாம் நமது உடை மற்றும் வெளி அழகை எந்த அளவிற்கு உற்று நோக்குகிறோமோ அந்த அளவிற்கு நம் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக உற்று நோக்க வேண்டும். இது போன்ற முக்கியமான நாட்களில் வாய் துர்நாற்றம் ஏற்படுவது நமது எதிரில் இருக்கும் நபருக்கு நம் மீதான கெட்ட அபிப்பிராயத்தை ஏற்படுத்தலாம்.
வாய் துர்நாற்றம்:
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வாய்ப்புண், வாய் வழி சுகாதாரமின்மை, உடலில் இருக்கும் பிரச்சனைகள், உடல் நலக் கோளாறுகள் காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படலாம். அல்லது நாம் சாப்பிட்ட ஏதேனும் ஒரு உணவு பொருள் கூட வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக அமையலாம். உதாரணம்: வெங்காயம் போன்ற உணவு.
இரண்டு முறை பல் துலக்குதல்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படி செய்தால் ஒழிய, நாம் வாழ்வழி சுகாதாரத்தை சிறப்பாக பேண முடியும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. இதனால் பல் சொத்தை வருவதையும், பற்களை வெண்மையாகவும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு இரு முறை பல் துலக்கியும் வாய் துர்நாற்றம் விலகாமல் இருப்பதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
துர்நாற்றம் வர காரணம் என்ன?
செரிமான கோளாறுகள்:
நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. வாய் பிடிப்பு, அமிலம் சுரப்பது போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். வயிற்று சுரக்கும் இந்த அமிலங்கள் காரணமாக வாயில் மாற்றம் ஏற்படுகிறது என அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க | சாப்பிட்ட பிறகு பல் துலக்கலாமா? மருத்துவரின் அறிவுரை!
நீரிழிவு:
அதிக ரத்த சர்க்கரை அளவினால் ஏற்படும் நோய் பாதிப்புகள் ஒன்று நீரிழிவு நோய். இந்த நோய் ஏற்பட்டால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படலாம். அதில் ஒன்று வாய் துர்நாற்றம் ஆக இருக்கும். ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரை அளவு காரணமாக இது ஏற்படுவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சிறுநீரகப் பிரச்சனை:
உடலில் இருக்கும் கெட்ட நீர் சேர்ந்து சிறுநீரகத்தில் கலக்கும் போது சிறுநீரகம் பாதிக்கப்படும். இது ரத்தத்திலும் டாக்சின்ஸ் கலக்க காரணமாக இருக்கும். இதனால் யூரிமிக் பிரத் எனும் வாய் நாற்றம் ஏற்படுகிறது. இதனை காலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி கண்டுபிடித்திருக்கிறது. நோய் பாதிப்பின் அறிகுறியாகவும் இந்த வாய் நாற்றம் இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கல்லீரல் பாதிப்பு:
ஃபேட்டி லிவர் உள்ளிட்ட கல்லீரல் பாதிப்புகளால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. கல்லீரல் சரியாக செயல்படாத போது இதற்கு காரணமாக இருக்கும் டாக்ஸின்ஸ் ரத்தத்தில் கலந்தால் இது போன்ற வாய் நாற்றம் ஏற்படலாம். எனவே எவ்வளவு வாயை சுத்தம் செய்தும் வாய்நாற்றம் சரியாகவில்லை என்றால் அதற்கு இது காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | டூத்ப்ரஷ் பயன்படுத்தாமலே பற்கள் வெண்மையாக இருக்க சில வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ