எடை இழப்புக்கான குறிப்புகள்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டு வைத்தியங்கள்


உடல் பருமனை குறைக்க, சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையாக உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள், சிலர் மருந்து மாத்திரைகளை கூட உட்கொள்கிறார்கள். எனினும், சிலருக்கு இவற்றுக்கான நேரமோ, இவற்றுகு ஆகும் செலவை ஏற்கும் வசதியோ இருப்பதில்லை. மேலும், பெரும்பாலும் பலருக்கு இவற்றால் எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக, இவற்றின் பக்க விளைவுகளால் சிலர் அவதிப்படுகிறார்கள். இந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், உடல் எடையை குறைக்க பல வித வீட்டு வைத்தியங்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு வீட்டு வைத்தியத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 


தண்ணீர்


நீர் ஒரு அதிசய பானமாகும். இது உடலின் நீரேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இது உடலில் உள்ள செல்களை சரி செய்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது தவிர, தண்ணீர் உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். ஆனால் சில மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் பல நோய்கள் குணமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? உங்கள் தொப்பையில் உள்ள கொழுப்பு அதிகரித்து வருகிறதா? அப்படி என்றால், நீங்கள் ஒரு சிறப்பம்சம் வாய்ந்த பானத்தை முயற்சி செய்து பார்க்கலாம். இதன் மூலம் தொப்பை கொழுப்பு குறைந்து எடை தானாக கீழ் நோக்கி செல்லும். 


இந்த அற்புத பானத்தை தயார் செய்யும் செயல்முறையை பற்றி இந்த பதிவில் காணலாம். உணவுக் கட்டுப்பாட்டால் எந்த பலனும் காணாதவர்கள் கண்டிப்பாக இந்த பானத்தை குடித்து பார்க்கலாம். 


எடை குறைப்பு பானத்தை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:


- 2 தேக்கரண்டி வெந்தய விதை தூள்
- 2 தேக்கரண்டி சோம்பு தூள்
- 2 தேக்கரண்டி உலர் இஞ்சி
- 2 துண்டுகள் இலவங்கப்பட்டை குச்சி
- அரை தேக்கரண்டி கல் உப்பு 
- எலுமிச்சை சாறு.


மேலும் படிக்க | சாக்லேட், ஸ்வீட்ஸ்களை கொடுக்காதீங்க... குழந்தைகளுக்கு இந்த இனிப்பு தான் நல்லது!


மேஜிக் பானத்தை செய்யும் செயல்முறை


மேலே குறிப்பிட்டுள்ள பொடிகள் அனைத்தையும் ஒரு ஜாடியில் போட்டு நன்கு கலக்கவும். கலக்கப்பட்ட அந்த பொடியில் இருந்து அரை டீஸ்பூன் எடுத்து, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். மீதமுள்ள பொடியை ஒரு பாக்சில் மூடி வைக்கவும். இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிப்பது நல்ல பலன்களை அளிக்கும். 


எடை இழப்புக்கு சோம்பு, இலவங்கப்பட்டை மற்றும் வெந்தய விதைகளின் நன்மைகள்


இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி எடை குறைக்க உதவுகிறது. வெந்தய விதை தூளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சர்க்கரையின் வெளியீட்டை மெதுவாக்குகிறது மற்றும் பிடிவாதமான தொப்பை கொழுப்பை எரிக்கிறது. மறுபுறம், சோம்பு உட்கொள்வது உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. மேலும் கொழுப்பை குறைக்கிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி அதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கலிய உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஏழையின் முந்திரி வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டா சட்டுன்னு வெயிட் குறையும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ