உடல் எடை குறைந்து பிளாட் டம்மி வேண்டுமா? அப்போ இரவு உணவில் இதை சாப்பிடுங்கள்

Weight Loss Dinner: சில காரணங்களால் உங்கள் எடை வரம்பை மீறி அதிகரித்திருந்தால், பதற்றம் கொள்ள வேண்டாம். இன்று நாங்கள் இரவு உணவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை கூற உள்ளோம், இதன் மூலம் உடல் எடை ஐஸ் போல் கரையத் தொடங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 27, 2023, 07:32 AM IST
  • சோயாபீன்ஸை காய் செய்து சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்த நன்மை பயக்கும்.
  • உப்மா இரவு உணவிற்கு சிறந்த தேர்வாகும்.
  • உடல் எடையைக் கட்டுப்படுத்தும் உணவு முறை.
உடல் எடை குறைந்து பிளாட் டம்மி வேண்டுமா? அப்போ இரவு உணவில் இதை சாப்பிடுங்கள் title=

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் உணவு முறை: மோசமான வாழ்க்கை முறையாலும், உணவில் ஏற்படும் குளறுபடிகளாலும், இன்றைய காலத்தில் உடல் பருமன் பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. உடல் பருமன் அதிகரித்தால், அதைக் குறைப்பது மிகவும் கடினம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, முடிந்தவரை, ஒவ்வொருவரும் தனது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். எனவே இதுபோன்ற மூன்று விஷயங்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம், இதை நீங்கள் தினமும் இரவு உணவில் சாப்பிட ஆரம்பித்தால், உங்கள் உடல் எடை ஐஸ் போல் கரையத் தொடங்குவது மட்டுமல்லாமல், அடிவயிற்று தொப்பையும் குறையாத தொடங்கும். எனவே அந்த மூன்று விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

எடை இழப்பு இரவு உணவு ரெசிபி (Weight Loss Dinner Recipes)

சோயாபீன்ஸ் கறி
உடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு உணவில் சோயாபீன்ஸை காய் செய்து சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்த நன்மை பயக்கும். இந்த காய்கறியில் அதிக புரதம் கிடைக்கிறது, இதன் காரணமாக வயிறு நிரம்பியிருப்பதோடு எடையும் சமநிலையில் இருக்கும். நீங்கள் விரும்பினால், இரவு உணவில் சோயாபீனில் செய்யப்பட்ட டோஃபுவையும் சாப்பிடலாம்.

உப்மா உட்கொள்ளல்
உப்மா ஒரு சிறந்த மற்றும் லேசான தென்னிந்திய உணவாகும். இது தயாரிப்பதற்கு மிகக் குறைந்த நேரமே எடுக்கும், மேலும் இது சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடுவதால், வயிற்றில் படிந்திருக்கும் கொழுப்பு படிப்படியாக குறையத் தொடங்குகிறது. இரவில் லேசான உணவு சிறந்ததாகக் கருதப்படுவதால் (Weight Loss Dinner), உப்மா இரவு உணவிற்கு சிறந்த தேர்வாகும்.

கம்பு கிச்சிடி
நீங்கள் விரும்பினால், இரவு உணவில் கம்பு கிச்சடியை (Weight Loss Dinner) சாப்பிடலாம். இந்த கிச்சடி கம்பு மற்றும் பல காய்கறிகள் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கிச்சடியில் சில பருப்புகளும் சேர்க்கப்படுகின்றன, அதன் பிறகு அது சுவையாக மாறும். இந்த கிச்சடி சாப்பிடுவதால், உடலில் உள்ள கொழுப்பு படிப்படியாக தானாகவே குறையும்.

தலியா
தலியாவின் பெயரைக் கேட்டவுடன் பெரும்பாலானோர் முகம் சுளிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நீங்கள் விரும்பினால், காய்கறிகள் மற்றும் மசாலா உதவியுடன் சுவையாக செய்யலாம். இரவு உணவிற்கு, பச்சை காய்கறிகளை கலந்து தலியா உப்புமா தயாரிக்கவும். இதில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்-பி போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பது சிறப்பு.

மேலும் படிக்க | உடலில் இந்த குறைபாடெல்லாம் தெரிகிறதா... அது வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்!

ஜவ்வரசி உப்புமா
ஜவ்வரசி  உப்புமாவை லேசான இரவு உணவாகவும் சாப்பிடலாம். ஜவ்வரசி உப்புமாவை செய்து சாப்பிடலாம், ஏனெனில் இந்த உப்புமா இரவு உணவிற்கு ஒரு நல்ல உணவாகும். இது தவிர, எப்போதும் செய்யப்படும் உப்புமாவை தயாரித்துச் சாப்பிடுவது இது ஒரு நல்ல தேர்வாகும்.

முளைகட்டிய பயிர்கள்
முளைகட்டிய பயிர்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் மற்ற தின்பண்டங்களை விட குறைவான கலோரிகள் இதில் உள்ளன. பருப்பை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் முளைப்பயிறு தயாரிக்கப்படுகின்றன. முளைப்பயிறு சாப்பிடுவதால் உடலுக்கு பலம் கிடைப்பதுடன் உடலில் கொழுப்பு அதிகரிக்காது. இது தவிர, எடையைக் கட்டுப்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். முளைகளில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | காலையில் முடி மற்றும் தோலுக்கு மோரை தடவினால் இவ்வளவு நன்மைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News