Jamun and Cinnamon Drink For Weight Loss In Tamil: தற்போது நாடு முழுவதும் கடுமான வெப்பம் நிலவி வருகிறது. அனல் காற்று மற்றும் பலத்த சூரிய ஒளி காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை குறைத்துவிட்டனர். மறுபுறம் கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது குளிர்காலத்தை விட சற்று எளிதானது. அதன்படி இந்த கோடை வெயிலின் தாக்கலில் நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியுடன் இந்த இரண்டு பொருட்களால் செய்யப்பட்ட பானத்தை கட்டாயம் உட்கொள்ள தொடங்கவும். நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையிலிருந்து (Jamun and Cinnamon Drink Reduce Belly Fat) தயாரிக்கப்படும் இந்த பானம் உடல் எடையைக் சுலபமாக குறைக்க உதவும். இதன் குளிர்ச்சி விளைவு, தொப்பை கொழுப்பை விரைவில் கரைக்க உதவுவதுடன், உடலை குளிச்சியுடன் வைத்திருக்கவும் உதவும். எனவே உடல் எடையை குறைக்க நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டை பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டை பானம் தயாரிப்பது எப்படி - (How To Make Jamun and Cinnamon Drink For Weight Loss)?


நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டை பானம் தயாரிக்க, முதலில் நாவல் பழத்தில் இருக்கும் விதையை தனியாக அகற்றிக் கொள்ளவும். பின்னர் இந்த பழத்தை நன்கு கழுவிக்கொள்ளவும். அதன் பின்னர் ஒரு பிளெண்டரில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்க்கவும். ஷாட் கிளாஸின் விளிம்பை எலுமிச்சை கொண்டு மூடி, கல் உப்பை தடவவும். இந்தக் கிளாஸில் தயார் செய்த நாவல் பழம் மற்றும் ஊறவைத்த துளசி விதைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.


மேலும் படிக்க | weight loss Tips : ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க..


நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் - Jamun and Cinnamon Health Benefits:
கால்சியம், இரும்பு, மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நாவல் பழத்தில் நிறைந்துள்ளது. நாவல் பழத்தில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் உடல் எடையைக் குறைக்க முடியும். மறுபுறம் இலவங்கப்பட்டையில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஆற்றல், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளன, இது உடலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த இலவங்கப்பட்டை மற்றும் நாவல் பழமானது செரிமானத்தை மேம்படுத்த உதவும். இந்த பானத்தை குடிப்பதால் வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | weight loss Tips : தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ