Cooking Oil To Control High Cholesterol: நம் உணவு முறையும் வாழ்க்கை முறையும் நமது உடல் ஆரோக்கியத்துடன் மிகப்பெரிய அளவில் தொடர்பு கொண்டு உள்ளன. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலமாகவும் நாம் நீண்ட நாட்களுக்கு எந்த வித உடல்நல பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். நம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பதில் நாம் சமையல் செய்ய பயன்படுத்தும் எண்ணெய்க்கு முமுக்கிய பங்கு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது உணவு வகைகளில் பெரும்பாலும் அதிக எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் நமக்கு கொலஸ்ட்ராலும் மிக வேகமாக அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய கோளாறு, கரோனரி தமனி நோய்கள் போன்ற பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.


இவை அனைத்தையும் தவிர்க்க வேண்டுமானால் நமது சமையல் எண்ணெயில் கவனம் செலுத்த வேண்டும். இரத்த நாளங்களில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க எந்தெந்த எண்ணெயை நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.


சமையலில் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் உடல் நல பிரச்சினையை தவிர்க்கலாம்


ஆளி விதை எண்ணெய் (Flaxseeds Oil)


ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கின்றது.. உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையாமல் அதிகமாகவே இருந்தால் உங்கள் சமையலில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். எனினும் இதை உபயோகிக்கும் பொழுது அதிக சூடாக்கக்கூடாது என்பதையும் இதை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | சோகமாக உணர்கிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிட்டால் மகிழ்ச்சி அடையலாம்!


ஆலிவ் எண்ணெய் (Olive Oil)


இந்தியாவில் பெரும்பாலும் ஆலிவ் எண்ணெயின் தயாரிப்பு குறைவாகவே இருக்கின்றது. ஏனெனில் இங்கு ஆலிவின் உற்பத்தியும் குறைவே. இதை நாம் மத்திய கிழக்கு அல்லது மத்திய தரை கடல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளோம்.. ஆகையால் இதன் விலையும் அதிகமாக இருக்கின்றது. ஆலிவ் என்ணெயின் விலை அதிகமாக இருந்தாலும் இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் நன்மை பயக்கும் எண்ணையாக கருதப்படுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. மேலும் இது கொலஸ்ட்ராலை (Cholesterol) குறைப்பதில் மிக உதவியாக இருக்கின்றது


கடலை எண்ணெய் (Peanut Oil)


வேர்க்கடலை பலருக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கின்றது. ஆனால் அதன் எண்ணையை அந்த அளவிற்கு யாரும் பயன்படுத்துவதில்லை. எனினும் இதைக் கொண்டு சமைப்பதால் உணவுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பதே உண்மையாகும்.. இதில், வைட்டமின் ஈ, ஃபைடோஸ்டெரால் ஆகியவை உள்ளன. இதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இதைக் கொண்டு உணவுகளை சமைக்க பரிந்துரைக்கப்படுகின்றது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆரோக்கியமாய் கொழுப்பைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள்! நாட்டுக் காய்களின் அற்புத மேஜிக்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ