உடல் பருமன் பாடாய் படுத்துதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க.. சுலபமா, வேகமா எடையை குறைக்கலாம்
Weight Loss: உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியாக கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பு: கோடை காலம் உடல் எடையை அதிகரிக்க சிறந்த நேரம். மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் தினமும் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், பலரால் இவற்றாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஆனால், உடல் எடையை பல எளிய வழிகளிலும் குறைக்கலாம். உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியாக கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புரத உட்கொள்ளலை அதிகரிக்க
உணவு உட்கொண்ட பிறகு புரதங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன. ஆகையால் அனைவரும் தங்கள் உணவில் 'லீன் புரோட்டீன்' சேர்த்துக்கொள்ள வேண்டும். லீன் புரோட்டீன் என்றால் - கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் சிறிய அளவில் காணப்படும் உணவுகள் ஆகும். மெலிந்த புரதத்தின் சில நல்ல ஆதாரங்களில் சிக்கன் ப்ரெஸ்ட், கேண்ட் லைட் ட்யூனா, சால்மன், முட்டை, இறால், வான்கோழி ப்ரெஸ்ட், டோஃபு, ஒல்லியான சிவப்பு இறைச்சி, குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், முளைகள், பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகியவை அடங்கும்.
ஃபைபர் கண்டிப்பாக தேவை
ஃபைபர் பற்றிய முக்கிய விஷயம் என்னவென்றால், இது உங்கள் உணவில் கூடுதல் கலோரிகளைச் சேர்க்காமல் உங்கள் பசியை அடக்குகிறது. இது உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையான உணர்வுடன் இருக்க வைக்கிறது. இந்த வழியில் எடை இழப்புக்கு இது மிகவும் முக்கியமானது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் ஜீரணிக்க இதை அதிக நேரம் எடுக்கும். இதனால் நமக்கு நிண்ட நேரம் நிறைவான உணர்வு கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்த பிற உணவுகளில் அதிக நார்ச்சத்து தானியங்கள், முழு கோதுமை ரொட்டி, கோதுமை தவிடு, பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும்.
குறைந்த கலோரி உணவுக்கு மாறுங்கள்
குறைந்த கலோரி கொண்ட உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை நோக்கி உங்கள் ரசனையை வளர்த்துக் கொள்ளுங்கள். அவற்றை உங்கள் புதிய உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். எடுத்துக்காட்டாக, சீமை சுரைக்காயை நீங்கள் வேக வைத்து, சுட்டு, இன்னும் பல வழிகளில் பயன்படுத்தலாம். 100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. தினசரி உணவு உட்கொள்ளலின் போது கலோரி உணர்வுடன் இருப்பது மிக நல்லது. சுரைக்காய் போல, கீரையுடன் சாலட்டையும் தயார் செய்யலாம். கூடுதலாக, பீட்ரூட், கேரட், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், கீரை, சுரைக்காய், ப்ரோக்கோலி, தக்காளி, தர்பூசணி மற்றும் ஆப்பிள்கள் அனைத்தும் மிகக் குறைந்த கலோரி உணவுகள்.
நீர்ச்சத்து உள்ள உணவுகள்
பொதுவாக நாம் தண்ணீர் குடிப்பதைப் பற்றி பேசுகிறோம், ஆனால் நீங்கள் தண்ணீர் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களை குறைந்தபட்ச கலோரிகளால் நிரப்புகிறது. இது நாள் முழுவதும் உங்களை அதிக திருப்தியுடன் உணர வைக்கிறது. தர்பூசணி, கீரை மற்றும் வெள்ளரி போன்றவற்றை சாப்பிடலாம். இவை அனைத்தும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆகும்.
மேலும் படிக்க | சீயக்காய் தூள் ஒன்று மட்டும் போதும்.. தலை முடி காடு போல வளரும்
மெலிதாக இருக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றவும்
- எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள். எதையாவது சாப்பிட நினைக்கும் போதெல்லாம், அதற்கு பதிலாக ஒரு சிப் தண்ணீர் குடிக்கலாம். நீர் முழுமையின் உணர்வைத் தருகிறது. ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை உட்கொள்வதும் இதனால் தவிர்க்கபப்டும்.
- சுறுசுறுப்பாக இருங்கள். வாகிங், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை தினசரி வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
- வெளியே சாப்பிடுவதை தவிர்த்து முடிந்தவரை வீட்டிலேயே சாப்பிடுங்கள்.
- பசியை கட்டுப்படுத்த சாப்பாட்டுக்கு முன்னர் காய்கறிகள் போட்ட சூப் குடிக்கலாம்.
- நாம் உணவு உட்கொள்ளும் போது, மெதுவாக சாப்பிடுவதையும், நன்றாக மென்று சாப்பிடுவதையும் பழகிக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | வயிற்றில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? மிகப்பெரிய பிரச்சனையில் முடியும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ