சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வாழ வைக்கும் வாழைக்காயை அடிக்கடி சேர்த்துகோங்க
Health Benefits of Raw Banana: வாழைப்பழம் நம் ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்க நன்மைகளை தரக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வாழைக்காயும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரியாமல் உள்ளது.
Health Benefits of Raw Banana: வாழைப்பழம் நம் ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்க நன்மைகளை தரக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வாழைக்காயும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரியாமல் உள்ளது. எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த வாழைக்காயை உட்கொள்வதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். வாழைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வாழைக்காயில் நார்சத்து, வைட்டமின்-சி, வைட்டமின்-பி, வைட்டமின்-கே, வைட்டமின்-ஈ போன்ற பல சத்துக்களும், ஆண்டி ஆக்ஸீடெண்டுகளும் நிறைந்துள்ளன. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது முதல், நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இருப்பது வரை பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக செயல்படும் காய்கறியான வாழ்க்கையை என்னும் சிறப்பு காய்கறியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
இதய ஆரோக்கியம்
வாழைக்காய் இதயம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் நமது இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவும். இது தவிர, வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. எனவே, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் ஆபத்து பெருமளவு குறைக்கிறது.
உடல் பருமன்
நார்சத்து நிறைந்த வாழைக்காய் நம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டாபாலிஸத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் சிறப்பாக இருந்தால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என்பதோடு, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் படிக்க | பயம் காட்டும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் பச்சை இலைகள்: சாப்பிட்டு பாருங்க
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைக்காய் ஒரு சஞ்சீவி எனலாம். நமது இன்சுலின் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வாழைக்காயின் கிளைசெமிக் குறியீடும் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இதை அடிக்கடி உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக (Diabetes Control Tips) கட்டுப்படுத்தலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
வாழைக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், வாழைப்பழத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் நீரிழிவு பிரச்சனையை குறைக்கிறது.
கண் ஆரோக்கியம்
வாழைக்காய் கண் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் கண் தொடர்பான பிரச்சனைகள் அண்டாமல் இருக்கவும், உடலில் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்
வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்தும் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை அடிக்கடி சேர்த்துக் கொள்வதினால், வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | ஆபீஸ் டென்ஷன் அதிகமா இருக்கா... இந்த டிப்ஸ்களை கடைபிடிங்க...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ