ஆண்களுக்கு முகத்தில் முடி அல்லது தாடி-மீசை இருப்பது சகஜம், ஆனால் ஒரு பெண் தன் முகத்தில் தேவையற்ற முடியை பார்க்கவே விரும்புவதில்லை. அதை நீக்க பல ஆயிரம் ரூபாய் செலவழித்து பியூட்டி பார்லரில் அவர் செய்யும் முறைகளால் முகத்தில் தோல் வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அதே மாதிரி முகத்தில் இருக்கும் முடிகளை நீக்க நீங்கள் ஷேவிங் கருவியையோ அல்லது க்ரீமையோ பயன்படுத்த முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே உங்க முகத்தில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் சில வீட்டு வைத்திய முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதற்காகத்தான் சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.


மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்


முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி?


1. ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்
இதற்கு ஓட்ஸை தண்ணீரில் போட்டு உப்ப வைத்து, வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்ட் தயார் செய்யவும். இந்த கலவையை நீங்கள் முடியை அகற்ற விரும்பும் முகத்தின் பகுதிகளில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும்.


2. வால்நட் மற்றும் தேன்
வால்நட்ஸ் மற்றும் தேன் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற பெரிதும் உதவுகிறது. இதற்கு முதலில் வால்நட்டை உரித்து அவற்றின் தோலைப் பிரிக்கவும். இப்போது இந்த தோல்களை மிக்ஸி கிரைண்டரில் நன்றாக அரைத்து, பின்னர் அதில் தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை விரல்களில் வைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும்.


3. மஞ்சள் மற்றும் கற்றாழை
மஞ்சள் முடி வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது, குறிப்பாக முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதில் இது மிகவும் பயனுள்ள தீர்வாகும். இதற்கு கற்றாழை ஜெல்லில் மஞ்சளை கலந்து பேஸ்ட் தயார் செய்யவும். இந்த பேஸ்டை முகத்தில் தேவையற்ற முடி வளர்ந்த பகுதிகளில் தடவவும். பேஸ்ட் காய்ந்ததும் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும். தொடர்ந்து பயன்படுத்தினால், முடி வளர்ச்சி குறையும்.


இந்த விஷயங்களில் கவனம் தேவை
பொதுவாக அனைவரின் சருமமும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வாமை அல்லது உணர்திறன் பிரச்சனை இருந்தால், வீட்டு வைத்தியம் எடுப்பதற்கு முன் தோல் மருத்துவரை அணுகவும். பேஸ்ட்டை ஒருபோதும் வேகமாக மசாஜ் செய்யாதீர்கள், இதனால் சொறி ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது. பேஸ்ட்டை முகத்தில் லேசாக தேய்ப்பதுதான் சிறந்த வழி. இது விரும்பிய பலனைத் தரும்.


(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ தமிழ் நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR