Waxing: டூத்பேஸ்ட் உதவியுடன் செலவில்லாமல் வீட்டிலேயே வேக்ஸிங் செய்யலாம்..!!
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு வேக்ஸிங் அல்லது த்ரெடிங் செய்வது மிகவும் வலியை ஏற்படுத்துவது என்பதோடு, அதிக பணமும் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
Homemade Hair Removal Cream: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற பெண்கள் பொதுவாக பயன்படுத்தும் முறை வேக்சிங் அல்லது த்ரெடிங் தான். இருப்பினும், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு வேக்ஸிங் அல்லது த்ரெடிங் செய்வது மிகவும் வலியை ஏற்படுத்துவது என்பதோடு, அதிக பணமும் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
சில சமயங்களில், இந்த தேவையற்ற முடி அகற்றுதல் சிகிச்சை காரணமாக அலர்ஜி, சொறி மற்றும் சரும் எரிச்சல் ஆகிய பக்க விளைவுகளும் ஏற்படலாம். அதே சமயம் தேவையற்ற முடிகளை நீக்க சந்தையில் கிடைக்கும் ஹேர் ரிமூல் க்ரீம்களில் ரசாயனங்கள் இருப்பதால் சருமத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். டூத்பேஸ்ட் உதவியுடன் நீங்கள் வீட்டில் முடி அகற்றும் கிரீம் செய்யலாம்.
ALSO READ | ஹேர் டை ஏதும் தேவையில்லை; நரை முடியை கருமையாக்கும் பிளாக் டீ..!!
Homemade Hair Removal Cream: முடி அகற்றும் கிரீமை வீட்டிலேயே தாயாரிப்பது எப்படி
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 டீஸ்பூன்
பால் - 4-5 தேக்கரண்டி
வெள்ளை பற்பசை (Tooth Paste) - 1 தேக்கரண்டி
இந்த பொருட்களை கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வீட்டிலேயே முடி அகற்றும் கிரீம் தயாரிக்கலாம். இதற்கு, கொடுக்கப்பட்ட அளவில் கடலை மாவு மற்றும் வெள்ளை பற்பசையை கலக்கவும். நன்றாகக் கலந்ததும், அதனுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் இறுக்கமாக இருந்தால், அதில் அதிக பால் சேர்க்கலாம். முடிகளை அகற்றுவதற்கான ஹேர் ரிமூவல் கிரீம் தயார்.
இப்போது, தேவையற்ற முடிகலி அகற்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் ரிமூவல் க்ரீமை தடவவும். இந்த கிரீம் உலர சிறிது நேரம் கொடுக்கவும். பின்னர் சிறிய அளவில் காட்டன் எடுத்து, அதன் உதவியுடன் முடியின் எதிர் பக்கத்தில் தேய்க்கவும். மிகவும் அழுத்தமாக தேய்க்க வேண்டியதில்லை, பின்னர் சாதாரண நீரில் முகத்தை கழுவ வேண்டும். அதன் பிறகு, சருமத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR