புதுடெல்லி: இந்திய உணவுகளில் பெரும்பாலானவை அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. அரிசியில், 242 கலோரிகள், 4.4 கிராம் புரதம், 0.4 கிராம் கொழுப் புச்சத்து, 53.4 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும், 
வைட்டமின் பி, கார்போ ஹைட்ரேட், போலேட், தயமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அரிசி உணவை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை பல கோடிகள் ஆகுக்ம். தென்னிந்தியாவில் கோதுமை உணவை விட, அரிசி உணவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரிசியில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றாலும், வெள்ளை அரிசியை உண்பதால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் என்ற எண்னம் உள்ளது. எனவே பலரும், அரிசியில் சிகப்பு மற்றும் பழுப்பு அரிசியை உண்கின்றனர்.  


மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!


வெள்ளை அரிக்கும் பழுப்பு அரிசிக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும் என்ன?
அரிசியின் அடிப்படை வண்னம் பழுப்பு தான். பாலிஷ் செய்யப்படுவதற்கு பழுப்பு நிறமாக இருக்கும் அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட பிறகு அதன் நிறம் மாறி வெண்மையாக மாறிவிடுகிறது. அரிசியை, வெள்ளை மற்றும் பழுப்பு என்று சொல்வதைவிட, பட்டைத்தீட்டப்பட்ட அரிசி, பட்டைத் தீட்டப்படாத அரிசி என்று சொல்வதே உகந்தது.


தானியத்தை பாலிஷ் செய்யும்போது, அதில் உள்ள ​​தவிடு மற்றும் அதன் தோல் பகுதி அகற்றப்பட்டு விடுகிறது. அரிசியின் தோல் பகுதியில் தான், அதிக தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. தவிடு நீக்கப்பட்ட அரிசியாக கிடைக்கும்  வெள்ளை அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அகற்றப்படுகின்றன. பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!


பழுப்பு மற்றும் வெள்ளை அரிசி எது சிறந்தது?
சமைத்த வெள்ளை அரிசியின் கிளைசெமிக் குறியீடு 70க்கும் அதிகமாகவும், பழுப்பு அரிசியின் கிளைசெமிக் குறியீடு 50 ஆகவும் உள்ளது. அதாவது, பழுப்பு அரிசி இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்காது என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தானியம் ஆகும்.


பெரும்பாலானோர் வெள்ளை அரிசியை மட்டுமே விரும்பி உண்பதாகவும், இதனால் தேவையான அளவு நார்ச்சத்து உடலுக்குக் கிடைப்பதில்லை. பழுப்பு அரிசியுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக உள்ளது.  


(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ