நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாக இருந்தாலும், சில உறுப்புகள் பாதிக்கப்பட்டால், உடலின் முழு செயல்பாட்டையுமே பாதித்து விடும். லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சிறுநீரகவியல் துறையின் செயல் தலைவரான பேராசிரியர் விஸ்வஜித் சிங் , நாட்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து கூறுகையில், நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் அதிகம் வெளியில் தெரியாது என்பதால், அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். 60 சதவீத நோயாளிகளுக்கு, நோய் தீவிரமான பின்பே கண்டறியப்படுகின்றன. அப்போது, டயாலிசிஸ் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சை கொடுக்கும் சாத்தியக்கூறு மட்டுமே எஞ்சியிருக்கும் எனவும் எச்சரிக்கிறார்.
நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) என்றால் உங்களுடைய சிறுநீரகங்கள் சரிசெய்ய முடியாதளவுக்கு பழுதடைந்துவிட்டன என்ற நிலை ஆகும். இது நாளாக ஆக மோசமாகிக்கொண்டே போகும் என்றும் அர்த்தம். சிறுநீரக நோய் குறித்து மேலும் கூறுகையில், கண்கள் மற்றும் கால்களைச் சுற்றியுள்ள வீக்கம், இரத்த சோகை மற்றும் சில நேரங்களில் தலைவலி அல்லது வாந்தி ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோயின் (CKD) ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம் என லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
மூட்டுகளில் வீக்கம், கண்கள் மற்றும் கால்களில் வீக்கம், ஹீமோகுளோபின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருத்தல், அவ்வப்போது தலைவலி மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகள் இருந்தால், தாமதமின்றி சிறுநீரக மருத்துவரை அணுகவும், என சிறுநீரக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு பிரச்சனை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஒரு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், மருந்துகளாலேயே அதனை குணப்படுத்தலாம்.
இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு நபருக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளதாக புள்ளி விப்ரங்கள் தெரிவிக்கின்றன, கடந்த சில ஆண்டுகளாக நாள்பட்ட சிறுநீரக நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுக்கு நோய் இருப்பது அறியாமல் உள்ளனர். அறிந்தவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக, சிறுநீரகத்தின் சிறிய இரத்த நாளங்கள் சேதமடைகின்றன என்பதால், இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, மன அழுத்த மேலாண்மை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் நாள்பட்ட சிறுநீரக நோயைத் தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ