உடல் எடையை குறைக்க சிறந்த உணவு எது? சாதமா, ரொட்டியா?
Rice vs Roti: அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
Weight Loss Tips: இன்றைய நவீன உலகில் உடல் பருமன் பலரை பாடாய் படுத்தி வருகின்றது. தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறிப்பதற்கு மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். குறிப்பாக, நமது உணவில் சில மாற்றங்களை செய்வதே நல்ல பலன்களை அளிக்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரும்பாலும் ஒரு கேள்வி மனதில் தோன்றுவதுண்டு. ரொட்டியா, சாதமா? எதை சாப்பிட்டால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்? என்ற கேள்விதான் அது. நீரிழிவு நோயாளிகளுக்கும், ரொட்டி அல்லது அரிசியில் எதை தேர்ந்தெடுப்பது என்ற சந்தேகம் எழுவதுண்டு. ரொட்டியையும் சாதத்தையும் சேர்த்து சாப்பிடுவது சரியா தவறா? இப்படியும் பல கேள்விகள் உள்ளன. இந்த கேள்விகளுகான விளக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Rice vs Roti: எதை உட்கொள்வது சிறந்தது?
அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது. அரிசியில் அதிக புரதமும், சப்பாத்தியில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. எனினும் வெள்ளை அரிசியில் புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது.
உடல் எடையை குறைக்க எது சிறந்தது? ரொட்டியா? சாதமா?
- உடல் எடையை குறைக்க ரொட்டி சபபிடுவது நல்லதா அல்லது சாதம் சாப்பிடுவது நல்லதா என்ற கெள்வி பலருக்கு உள்ளது. இரண்டுக்கும் தனித்தனியான சிறப்புப் பங்கு உள்ளது. இரண்டுமே வெவ்வேறு வழிகளில் உடல் எடையைக் குறைப்பதில் உதவிகரமாக இருக்கும்.
- ஒரு கிண்ணம் சாதம் சாப்பிட்டாலும் கூட சிறிது நேரத்தில் பசி எடுக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், இது விரைவில் ஜீரணமாகிவிடும். ஆனால், ரொட்டி சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ரொட்டியை உட்கொள்ளலாம். எனினும், அதனுடன் சேர்த்து இரண்டு கிண்ணம் காய்கறிகளையும் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
- இது தவிர புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
மேலும் படிக்க | தெருவிளக்குகள் மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தலாம்... அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை...!!
சர்க்கரை நோயாளிகளுக்கு எது சிறந்தது? ரொட்டியா, சாதமா?
- இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு (Diabetes Patients) அரிசியை விட ரொட்டி சிறந்ததாக கூறப்படுகிறது,
- நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கு ரொட்டி சாதத்தைக் காட்டிலும் ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகின்றது.
- குறிப்பாக உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் இரண்டுக்கும் இது சாதத்தைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- சாதம் வேகமாக செரிமானம் ஆகி, உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கவும் செய்வதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்றதாக கருதப்படுவதில்லை.
- ரொட்டியில் குறைந்த-ஜிஐ இருப்பதோடு, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. ஆகையால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றது.
- இதை உட்கொண்டால், நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
- ரொட்டியில் சோடியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் அரிசியில் குறைவாகவே உள்ளன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்: முழு பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ