செல்போன்கள் பயன்படுத்தாத நபர்கள் உலகில் இல்லை என்று கூறும் அளவிற்கு பரந்து விரிந்துவிட்டது. மொபைல்போன்களில் விழித்து, அதனுடனே நாள் முழுவதும் வேலை செய்து, உறங்கும் தருவாயிலும் செல்போனுடனே இருக்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல்போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷனானது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல்போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பொது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமென்று  ஆய்வில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் கலிபோர்னியா சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது.


அதன்படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அதிர்வலைகள் செல்போன் மூலம் நம்மைத் தாக்குவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவமனைகளில் மூளையில் கட்டிகளுடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர், 10 ஆண்டுக்கும் மேலாக செல்போனை அருகில் வைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்.


கதிர்வீச்சை மட்டுமே மொபைல்போன்கள் உமிழவில்லை நெருப்பையும் தன்னுள் கொண்டுள்ளதென்பதை நீங்கள் உணரவேண்டும். பேட்டரி சிக்கல்கள் விளைவாக ஸ்மார்ட்போன் வெடிப்பு ஏற்பட்டு உங்கள் தலையணையில்  தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதன் பின்னர் ஏற்படும் தீமைகளை நீங்களே அறிவீர்கள். 


முதலில் கூறியபடி, ஸ்மார்ட்போன்கள் நமது உறக்க சுழற்சியையே மாற்றியமைத்து விட்டது. இரவு என்பது ஓய்வு எடுக்கும் நேரம், அதை நிகழ்த்தாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வு குறைந்து பாதிப்பும் ஏற்படும்.


எனவே உறங்கும் போது, படுக்கையில் இருந்து செல்போனை தொலைவில் வைத்துவிடுவது நல்லது.