உடல் நச்சுக்களை நீக்கி, நீரிழிவை ஓட விரட்டும் அரச மலை இலை சாறு!
இயற்கை வைத்தியம்: நமது ஆயுர்வேதத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட பல தாவரங்கள் மூலம் சிகிச்சை அளிக்க முடியாத எந்த நோயும் இருக்க முடியாது எனலாம். ஆயுர்வேதத்தில் அரச மர இலை மூலம் பல நோய்களைக் குணப்படுத்தலாம்.
அரச மர இலை சாறு நன்மைகள்: அரச மர இலைகளில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் இலைகளின் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அரச மர இலைகளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பல தீவிர நோய்களைத் தவிர்க்க உதவுகிறது. கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், புரதம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகளும் அரச மர இலைகளில் காணப்படுகின்றன. அரச மர இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உடல்நலம் தொடர்பான பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. அரச மர இலைகளின் சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
நுரையீரலை ஆரோக்கியம்
அரச மர இலைகள் நுரையீரலுக்கு நன்மை பயக்கும். அரச மர இலைகளின் சாறு நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க சிறப்பாக வேலை செய்கிறது. இந்த ஜூஸை குடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் அழற்சி பிரச்சனையும் நீங்கும். சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், அரச மர இலைகளின் சாற்றை குடிப்பதன் மூலமும் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம்.
இருமலுக்கு நிவாரணம்
அரச மர இலைகளில் உள்ள பண்புகள் இருமலை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இதன் சாற்றை உட்கொள்வதால் இருமல் பிரச்சனை நீங்கும். இந்த ஜூஸை குடிப்பதால் சளி பிரச்சனையும் நீங்கும்.
மேலும் படிக்க | Heath Alert: பச்சையாக சாப்பிடக் கூடாத ‘சில’ காய்கறிகள்!
செரிமான பிரச்சனைகள் நீங்கும்
அரச மர இலைகளின் சாறு அருந்தினால் வயிற்றுப்போக்கு பிரச்சனை தீரும். நீங்கள் வயிற்றுப்போக்குடன் குமட்டல் பிரச்சனையையும் எதிர்கொண்டிருந்தால், இந்த சாற்றை உட்கொள்வதன் மூலம், இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இது தவிர, இந்த சாறு வாயு பிரச்சனை, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது.
இரத்தத்தை சுத்திகரிக்கும் பானம்
அரச மர இலைச்சாறு நச்சுக்களை நீக்கும் பானமாக செயல்படுகிறது. இந்த ஜூஸை குடிப்பதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதால், சரும பிரச்சனைகள் நீங்கும். இந்த பானத்தை குடிப்பதால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளும் நீங்கும்.
நீரிழிவு நோய்க்கும் அருமருந்தாகும்
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. அரச மர இலைகளில் உள்ள பண்புகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. அரச மர இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியம்
அரச மர இலைகளின் சாறு பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து பற்களை ஆரோக்கியமாக வைக்கிறது. பீப்பல் ஜூஸ் குடிப்பதால் ஈறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இதயத்திற்கு இதமான ‘இளநீரை’ நீரிழிவு நோயாளிகள் குடிக்கலாமா...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ