நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பாதுகாப்பான கருத்தடை முறைகள்
கருத்தடை மருந்துகளின் 6 சிறந்த வடிவங்களின் பட்டியல் இங்கே.
தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்த வகையான கருத்தடை அவர்களின் நோக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பது பலருக்குத் தெரியாது. பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே கருத்தடை மருந்துகளின் 6 சிறந்த வடிவங்களின் பட்டியல் இங்கே.
1. மாத்திரைகள்
கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன்கள் மூலம் கரு உருவாகாமல் தடுக்கிறது. பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இத்தகையை கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். இதன் பக்க விளைவுகளாக வாந்தி அடுத்த மாதவிடாய் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். Combined contraceptive மற்றும் Progestogen என இரண்டு வகை கருத்தடை மாத்திரை வகைகள் உள்ளன. இரண்டுமே பரிந்துரைக்கப்படுபவை.
ALSO READ | மது அருந்தும் ஆண்கள் “அந்த விஷயத்துல” சூப்பரா இருப்பாங்கலாம்...!
2. டெப்போ புரோவெரா ஊசி
டெப்போ புரோவெரா 150 மிகி ஊசி (Depo Provera 150Mg Injection) என்பது ஒரு புரோஜெஸ்டின் ஆகும், இது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகளையும் அண்டவிடுப்பையும் கட்டுப்படுத்த உதவுகிறது. புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனைப் போலவே இந்த மருந்தும் செயல்படுகிறது. இதுவும் ஹார்மோன் மூலம் பணி செய்யும். நல்ல பலன்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாம்.
3. ஆணுறைகள்
கருத்தடை உறை (Condom) என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும். கருத்தடை உறைகளில் ஆணுறை, பெண்ணுறை என்பன உள்ளன. இந்த கருத்தடை உறை செக்ஸின் போது ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு, திரவ பரிமாற்றத்தை தடுக்கிறது. கருத்தடைக்கு மட்டும் அல்ல செக்ஸ் மூலம் பரவும் நோய்களையும் தடுக்கிறது காண்டம்.
4. டையாஃப்ரேம்
விந்து பெண் உறுப்புக்குள் செல்லாமல் தடுக்கும் சாதனம். இதில் இருக்கும் ஒருவகை ரசாயனம், விந்தணுக்களை கொல்லும். இந்த சாதனத்தை உடலுறவு கொள்வதற்கு 6 மணி நேரத்துக்கும் முன் பொருத்தி விட வேண்டும். உடலுறுவுக்கு பின் 24 மணி நேரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
5. அவசரகால கருத்தடை
அவசரகால கருத்தடைக்கு, இரண்டு முறைகளை பயன்படுத்தலம். ஒன்று மாத்திரைகள், மற்றொன்று காப்பர் ஐயூடி. இ.சி.பி என்ற மாத்திரையை 70 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட பெண்கள் உட்கொள்ளலாம். இரண்டுமே 99% பயன் தரும். ஆனால், மாத்திரைகளைப் பொறுத்தவரை பக்க விளைவுகள் இருக்கலாம்.
ALSO READ | தினமும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
6. ஃபெம்காப்
ஃபெம்கேப் என்பது மருத்துவ தர சிலிகான் செய்யப்பட்ட மென்மையான மறுபயன்பாட்டு மாதவிடாய் கோப்பை ஆகும். இது உடலுறவுக்கு 6 மணி நேரத்திற்கு முன் யோனியில் செருகப்பட வேண்டிய லேடெக்ஸ் பொருட்களால் ஆனது மற்றும் அதிகபட்சம் 48 மணி நேரத்தில் வெளியே எடுக்கப்பட வேண்டும்.